வளர்ச்சி பணிகளில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் முச்சக்கர வாகனம் | H2E பவர் சிஸ்டம்ஸ்

7 June 2021, 12:03 pm
Hydrogen-Powered Three-Wheeler Under Development By H2E Power Systems
Quick Share

குறைந்த அழுத்த சேமிப்பு தொழில்நுட்பத்தைப் (low-pressure storage technology) பயன்படுத்தி இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் முச்சக்கர வாகனம் இந்தியாவில் உருவாக்கப்பட்டு வருகிறது. GITA விடம் நிதி பெறும் இந்தோ-கனேடிய திட்டத்தின் கீழ் புனேவை தளமாகக் கொண்ட h2e பவர் சிஸ்டம்ஸ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஹைட்ரஜன் இன் மோஷன் நிறுவனங்கள் மூலம் இந்த மேம்பாட்டுத் திட்டம் வழிநடத்தப்படுகிறது.

h2e பவர் சிஸ்டம்ஸ் ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலத்தால் இயங்கும் முச்சக்கர வண்டியை இந்திய சந்தையில் குறைந்த விலையில் தயாரித்து அறிமுகம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலத்தால் இயங்கும் முச்சக்கர வண்டியை உருவாக்க நிறுவனம் PEM ஃபியூயல் செல் மற்றும் புதுமையான ஹைட்ரஜன் சிலிண்டர்களைப் பயன்படுத்துகிறது.

நிறுவனத்தின் தகவலின்படி, ஹைட்ரஜன் முச்சக்கர வாகன கருத்தாக்கம் முதன்மையாக நகரங்களுக்குள்ளான போக்குவரத்தை இலக்காகக் கொண்டுள்ளது. பொது போக்குவரத்தும் மற்றும் பொருட்கள் போக்குவரத்தும் இதில் அடங்கும். ஹைட்ரஜன் முச்சக்கர வாகனம் எரிபொருளை சேமிக்க குறைந்த அழுத்தம் (50 BAR) கொண்ட ஹைட்ரஜன் சிலிண்டருடன் h2e இன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும்.

குறைந்த அழுத்த ஹைட்ரஜன் சிலிண்டர் தொழில்நுட்பத்தை கனடாவைச்  சேர்ந்த ஹைட்ரஜன் இன் மோஷன் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் காரணமாக, பூஜ்ஜிய-உமிழ்வு ஹைட்ரஜன் முச்சக்கர வாகனமானது மற்ற ICE மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு எதிராக போட்டியிட முடியும்.

ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனங்கள் மற்ற பூஜ்ஜிய-உமிழ்வு வாகனங்களை விட பெரிய நன்மைகளைக் கொண்டிருக்கும். பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள் சார்ஜ் செய்யப்பட வேண்டிய நிலையில், ஹைட்ரஜன் எரிபொருள் செல் வாகனங்கள் மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தையே தன்னில் கொண்டுள்ளன, இது பயணத்தின்போதே பேட்டரியை சார்ஜ் செய்கிறது.

Views: - 143

0

0