மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் ஆலை, ரூ.20 கோடி நிவாரணம் | ஹூண்டாய் அறிவிப்பு

28 April 2021, 5:37 pm
Hyundai to help set up oxygen plants in hospitals, announce ₹20-crore relief
Quick Share

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்று எண்ணிக்கைக்கு மத்தியில் நம் இந்தியா மருத்துவ ஆக்ஸிஜனுக்காகவும் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில், இந்திய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் இந்தியா, கொரோனா தொற்று நெருக்கடியைச்  சமாளிக்க உதவிகளையும் நிவாரணமும் வழங்க முன்வந்துள்ளது.

ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தனது பரோபகார பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை (HMIF) மூலம் ரூ.20 கோடியை கோவிட்-19 நிவாரண நிதியாக வழங்குவதாக அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு போன்ற மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்த இது உதவியாக இருக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மாருதி சுசுகி நிறுவனம் ஹரியானாவில் உள்ள தனது ஆலைகளை மூடுவதாகவும், இந்த நெருக்கடியான நேரத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க போவதாகவும் தெரிவித்திருந்தது.

அதையடுத்து, இப்போது ஹூண்டாய் நிறுவனமும் தனது வளங்களை மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகளை அமைக்க பயன்படுத்த போவதாக தெரிவித்துள்ளது. 

நோயாளிகளுக்கு உதவிகளை வழங்குவதையும் மருத்துவமனைகள் ஆக்ஸிஜனில் தன்னிறைவு பெற உதவுவதையும் நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. தவிர, மருத்துவ வசதிகளை வழங்க, பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றும் உதவி ஊழியர்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு அவர்களின் செலவுகளை ஏற்றுக்கொள்வும் ஹூண்டாய் அறக்கட்டளை உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 128

0

0

Leave a Reply