ரூ.11,000 விலையில் புத்தம்புதிய இன்ஃபினிக்ஸ் நோட் 10 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் | விவரங்கள் இங்கே

7 June 2021, 8:13 pm
Infinix NOTE 10 series launched in India
Quick Share

சீன தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபினிக்ஸ் தனது நோட் 10 தொடர் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் நோட் 10 மற்றும் நோட் 10 ப்ரோ மாடல்கள் உள்ளன. இந்த போன்களின் விலைகள் ரூ.10,999 முதல் தொடங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் உலக சந்தைகளில் அறிமுகமானது. அவை மீடியா டெக் ஹீலியோ செயலி, 5,000 mAh பேட்டரி, குவாட் ரியர் கேமராக்கள், 180 Hz touch sampling rate ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இன்ஃபினிக்ஸ் நோட் 10 மற்றும் நோட் 10 ப்ரோ ஒரு பஞ்ச்-ஹோல் கட்-அவுட் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது. பின்புறத்தில், அவை நான்கு கேமராக்கள் கொண்டுள்ளன.

சாதனங்கள் 6.95 இன்ச் ஃபுல்-HD+ (1080×2460 பிக்சல்கள்) IPS LCD திரையை 20.5:9 என்ற விகிதம் மற்றும் 180 touch sampling rate உடன் கொண்டுள்ளது. புரோ மாடல் 90 Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது.

இன்ஃபினிக்ஸ் நோட் 10 இல் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது, இதில் 48 MP முதன்மை சென்சார், 2 MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 MP டெப்த் கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது.

நோட் 10 ப்ரோ ஒரு குவாட் ரியர் கேமரா யூனிட்டைக் கொண்டுள்ளது, இதில் 64 MP மெயின் சென்சார், 8 MP அல்ட்ரா-வைட் லென்ஸ், 2 MP ஆழ கேமரா மற்றும் 2 MP மோனோக்ரோம் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 

செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, 16MP முன் எதிர்கொள்ளும் கேமராவைக் கொண்டுள்ளது.

மீடியாடெக் ஹீலியோ G85 மற்றும் மீடியாடெக் ஹீலியோ G95 சிப்செட்டிலிருந்து முறையே இன்ஃபினிக்ஸ் நோட் 10 மற்றும் நோட் 10 ப்ரோ ஆற்றல் பெருகிறது, 8 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

உட்புறத்தில், அவை ஆண்ட்ராய்டு 11-அடிப்படையிலான XOS 7.6 இல் இயங்குகின்றன மற்றும் 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

வெண்ணிலா மாடல் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது, புரோ பதிப்பில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது.

இன்ஃபினிக்ஸ் நோட் 10 போனின் 4 ஜிபி / 64 ஜிபி மாடலுக்கு ரூ.10,999 விலையும் மற்றும் 6 ஜிபி / 128 ஜிபி வேரியண்டிற்கு 11,999 ரூபாய் விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நோட் 10 ப்ரோ போனின் 8 ஜிபி / 256 ஜிபி பதிப்பின் விலை 16,999 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொலைபேசிகள் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும்.

Views: - 108

0

0

Leave a Reply