“இன்ஸ்டாகிராம் கிட்ஸ்” செயலி இப்போதைக்கு இல்லையாம்…செய்தி வெளியிட்ட இன்ஸ்டாகிராம்!!!

Author: Hemalatha Ramkumar
28 September 2021, 3:24 pm
Quick Share

இன்ஸ்டாகிராம் 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான பதிப்பை “இன்ஸ்டாகிராம் கிட்ஸ்” என்று அழைப்பதை நிறுத்துகிறது என்று பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான புகைப்பட பகிர்வு செயலி திங்களன்று கூறியது.

அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் மற்றும் வக்கீல் குழுக்கள் “இன்ஸ்டாகிராம் கிட்ஸ்” தொடங்குவதை எதிர்த்தனர். சமூக ஊடக நிறுவனங்களை அதன் திட்டங்களை கைவிட வலியுறுத்தி “ஆன்லைனில் குழந்தைகளை பாதுகாப்பதில் அர்த்தமுள்ள உறுதிப்பாட்டை செய்ய தவறிவிட்டோம்” என்று கூறியுள்ளனர்.

“இன்ஸ்டாகிராம் கிட்ஸ்” யை உருவாக்குவது சரியான விஷயம் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் தற்சமயத்திற்கு நாங்கள் இந்த வேலையை இடைநிறுத்துகிறோம்” என்று இன்ஸ்டாகிராம் ஒரு வலைப்பதிவு இடுகையில் கூறியது. இது அதன் பெற்றோர் மேற்பார்வை கருவிகளில் தொடர்ந்து பல மேம்பாடுகளை செய்ய இருக்கிறது என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.

“குழந்தைகள் ஏற்கனவே ஆன்லைனில் இருக்கிறார்கள் என்பதே உண்மை. அவர்களுக்காகவே குறிப்பாக வடிவமைக்கப்பட்ட வயதுக்கேற்ற அனுபவங்களை கொடுப்பது இன்று நாம் இருக்கும் இடத்தை விட சிறந்தது என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று இன்ஸ்டாகிராம் மேலும் கூறியது.

Views: - 339

0

0