வரவிருக்கும் மிகவும் மலிவுவிலையிலான ஜியோபோன் நெக்ஸ்ட் குறித்த தகவல்கள் கசிந்தது | விவரங்கள் இங்கே | JioPhone Next

Author: Hemalatha Ramkumar
17 August 2021, 12:43 pm
JioPhone Next details leaked
Quick Share

ரிலையன்ஸ் ஜியோவின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 4 ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10, 2021 அன்று விற்பனைக்கு வர உள்ளது. நிறுவனம் தனது 44 வது வருடாந்திர சந்திப்பின் போது ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. 

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஜூன் மாதம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.

ஜியோபோன் நெக்ஸ்ட்: கசிந்த தகவல்கள்

ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் பற்றி ஜியோ நிறுவனம் எதையும் அதிகாரப்போர்வமாக அறிவிக்கவோ பகிரவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் அதற்கு முன்னதாகவே பல நம்பகமான கசிவுகள் ஜியோபோன் நெக்ஸ்ட் குறித்து வெளியாகியுள்ளன. அந்த தகவல்களை உங்களுக்காக இங்கே தொகுத்துள்ளோம். 

ஜியோபோன் நெக்ஸ்ட் ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) இல் இயக்க வாய்ப்புள்ளது மற்றும் HD+ டிஸ்பிளே மற்றும் பின்புறத்தில் ஒற்றை கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்.

ஜியோபோன் நெக்ஸ்ட் 1440×720 ரெசல்யூஷன் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 215 சிப்செட், இது நுழைவு நிலை செயலி ஆகியவற்றை கொண்டிருக்கும். 

நோக்கியா 1.4 ஸ்மார்ட்போனில் இருப்பது போன்ற அம்சங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூகிளின் கேமரா கோ (Camera Go) மற்றும் டியோ கோ (Duo Go) போன்ற முன்பே நிறுவப்பட்ட அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

கூடுதலாக, வரவிருக்கும் ஸ்மார்ட்போனில் 2 GB LPDDR3 RAM மற்றும் 32 ஜிபி eMMC 4.5 இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜியோபோன் நெக்ஸ்ட் ப்ளூடூத் 4.2, டூயல் 4ஜி VoLTE, வைஃபை மற்றும் டூயல் சிம் ஆதரவு ஆகியவற்றை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கேமரா அம்சங்களைப் பொறுத்தவரை, ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13 MP கேமராவைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. பின்புற கேமரா வீடியோ பதிவு, HDR, FHD+ மற்றும் நைட் மோட் போன்ற ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 MP கேமரா இருக்கும்.

ஸ்மார்ட்போனின் விலையை நிறுவனம் பகிரவில்லை. ஆனால் இதன் விலை ரூ.4,999 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ​​iTel A53 Pro ஸ்மார்ட்போன் ரூ.5,000 விலையில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. இதை விட ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ஸ்மார்ட்போனின் விலை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோவின் அல்டிமேட் பிளான்!

டெலிகாம் ஆபரேட்டர்களான ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா ஆகிய இரண்டுமே மிகப்பெரிய 2ஜி பயனர் தளத்தைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோபோன் நெக்ஸ்ட் என்பது ரிலையன்ஸ் ஜியோவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்களின் 2ஜி பயனர்களை 4ஜி வசதியுடம் தங்கள் தளத்திற்கு ஈர்க்கும் முயற்சியாகும்.

ரிலையன்ஸ் ஜியோ இதுவரை 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டு தொலைத்தொடர்புத் துறையில் முன்னணியில் உள்ளது.  வரும் நாட்களில் ஜியோ எப்படி மற்ற நிறுவன பயனர்களை ஈர்க்கப்போகிறது என்பதை பார்க்க சுவாரசியமாக இருக்கும்.

Views: - 278

0

0