இந்தியாவில் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் விலை பற்றிய புதிய தகவல் கசிந்தது | விவரங்கள் உங்களுக்காக இதோ

Author: Dhivagar
3 September 2021, 9:34 am
JioPhone Next price in India
Quick Share

இந்தியாவில் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.5000 க்குள் இருக்கும்  என்று தெரியவந்துள்ளது. ஜியோபோன் நெக்ஸ்ட் முன்பதிவும் விரைவில் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம், தனது 44 வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் (AGM), JioPhone Next தொலைபேசியை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது என்றும், அது செப்டம்பர் 10 அன்று இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்றும் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது. 

ஆனால், அறிமுகம் செய்யும் நேரத்தில் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் விலை அல்லது முக்கிய விவரக்குறிப்புகள் குறித்து நிறுவனம் எந்த தகவலையும் வெளியிடவில்லை. 

அதையடுத்து, ஜியோபோன் நெக்ஸ்ட் மிகவும் மலிவான ஸ்மார்ட்போன் ஆக இருக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இப்போது, ​​ஒரு புதிய அறிக்கையின் மூலம் ஜியோபோன் நெக்ஸ்ட் போன்களின் விலை என்னவாக இருக்கும் என்பது குறித்து ஒரு தெளிவு கிடைத்துள்ளது. ஜியோபோன் நெக்ஸ்ட் முன்பதிவு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் இப்போது இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஜியோபோன் நெக்ஸ்ட் விலை

ஜியோபோன் நெக்ஸ்ட் இந்தியாவில் இரண்டு வகைகளில் கிடைக்கும் என்று புதிய அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. ஜியோபோன் நெக்ஸ்ட் போனின் அடிப்படை மாடலுக்கான விலை ரூ.5,000 க்கும் குறைவாக இருக்கலாம் என்றும் ஜியோபோன் நெக்ஸ்டின் டாப்-ஸ்பெக் மாடலைப்  பொறுத்தவரை, அதன் விலை ரூ.7,000 ஆக இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. 

பயனர்கள் ஜியோபோன் நெக்ஸ்ட் போனை வாங்குவதை எளிதாக்க, ரிலையன்ஸ் ஜியோ புதிய திட்டத்தை கொண்டு வரும் என்றும் கூறப்படுகிறது, இதில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான போன்களின் விலையில் 10% மட்டுமே முன்பணமாக செலுத்த வேண்டும், அதே சமயம் கடன் வழங்குபவர்களிடம் இருந்து மீதமுள்ள தொகைக்கு பைனான்ஸ் பெற்றுக்கொள்ள முடியும். இது குறித்து முழுமையான தகவல் இன்னும் வெளியாகிவில்லை. ஆனால் ஜியோபோன் நெக்ஸ்ட்-முன்பதிவு இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளதால் விரைவில் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்வமுள்ள வாங்குபவர்களுக்கு பயனுள்ள நிதி விருப்பங்களை வழங்க ரிலையன்ஸ் ஜியோ ஐந்து வங்கிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது என்று எகனாமிக் டைம்ஸ் இதழில் தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ தனது வரவிருக்கும் ஜியோபோன் நெக்ஸ்ட்டின் ஐந்து கோடி யூனிட்களை வரும் ஆறு மாதங்களில் விற்க இலக்கு வைத்துள்ளது. இதற்காக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), பிரமல் கேபிடல், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் அஷ்யூர் மற்றும் DMI ஃபைனான்ஸ் ஆகியவற்றின் பங்களிப்பு ஒவ்வொன்றும் 10,000 கோடி நிதி சேவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர, நான்கு வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை வாங்கும்போது ₹2,500 கோடி மதிப்பிலான கடன் ஆதரவை வழங்குவதாகவும் உறுதி செய்துள்ளன.

Views: - 402

0

0