ஸ்மார்ட்போன் இல்லாமலே வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துவது எப்படி…???

Author: Hemalatha Ramkumar
6 November 2021, 3:39 pm
Quick Share

வாட்ஸ்அப் தற்போது பல சாதன பீட்டா அம்சத்தை வழங்குகிறது. இது பயனர்களுக்கு வெப், டெஸ்க்டாப் மற்றும் போர்ட்டலுக்கான வாட்ஸ்அப்பின் புதிய பதிப்பை முயற்சிக்க ஆரம்ப அணுகலை வழங்குகிறது. வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் தொலைபேசிகளை இணைக்காமல் இணைக்கப்பட்ட துணை சாதனங்களைப் பயன்படுத்த இது அனுமதிக்கிறது.

வெப் பிரவுசர்கள் மற்றும் பிற சாதனங்களை உள்ளடக்கிய நான்கு சாதனங்களை ஒருவர் தனது கணக்கில் இணைக்க முடியும். இந்த அம்சம் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை ஆதரிக்கிறது என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது உங்கள் தனிப்பட்ட செய்திகள், மீடியா மற்றும் அழைப்புகள் அனைத்தும் தனிப்பட்டதாக இருக்கும்.

இதில் ஃபோனில் இணைய இணைப்பு இல்லாவிட்டாலும், நீங்கள் WhatsApp வெப், டெஸ்க்டாப் மற்றும் போர்ட்டலைப் பயன்படுத்த முடியும் என்பது நல்ல விஷயம். இருப்பினும், பிரதான சாதனம் (Main device) 14 நாட்களுக்கு மேல் துண்டிக்கப்பட்டிருந்தால், இணைக்கப்பட்ட சாதனங்கள் தானாகவே வெளியேற்றப்படும்.

உங்கள் ஸ்மார்ட்போன் இல்லாமல் வாட்ஸ்அப் வெப்பை எவ்வாறு பயன்படுத்துவது?
இதனை செய்வதற்கு ஆரம்ப கட்டத்தில் உங்கள் மெயின் சாதனத்தை இணையம், டெஸ்க்டாப் அல்லது போர்ட்டலுடன் இணைக்க வேண்டியிருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதன் பிறகு உங்கள் ஸ்மார்ட்போனை இணைக்காமல் WhatsApp ஐப் பயன்படுத்த முடியும். நீங்கள் அதை எப்படி செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

படி 1: உங்கள் மொபைலில் வாட்ஸ்அப்பைத் திறந்து, திரையின் மேல் வலது மூலையில் அமைந்துள்ள மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானைத் தட்டவும்.

படி 2: “Linked devices” என்பதைத் தட்டவும், பின்னர் “Multi device Beta” என்பதைத் தட்டவும். WhatsApp இப்போது ஒரு பக்கத்தைக் காண்பிக்கும். இது அம்சத்தின் வரம்புகள் மற்றும் பிற விஷயங்களை விளக்குகிறது.

படி 3: இப்போது, ​​”Join Beta” பட்டனைத் தட்டி, “Continue” பட்டனை அழுத்தவும். இது முடிந்ததும், QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனை WhatsApp இணையத்துடன் இணைக்க வேண்டும்.

இந்த அம்சத்தைப் பயன்படுத்துவதற்கு முன் என்ன நினைவில் கொள்ள வேண்டிவை:-
இந்த மல்டி மீடியா அம்சத்தைப் பயன்படுத்த நீங்கள் திட்டமிட்டால், தற்போது ஆதரிக்கப்படாத சில அம்சங்கள் உள்ளன. முதன்மை சாதனம் ஐபோனாக இருந்தால் துணை சாதனங்களில் உள்ள சாட்களை யாராவது அழித்துவிட்டால் அல்லது நீக்கினால் இந்த அம்சம் இயங்காது என்று நிறுவனம் தனது வலைப்பதிவு இடுகையில் கூறுகிறது.

வாட்ஸ்அப்பின் பழைய பதிப்பைப் பயன்படுத்தும் சாதனங்களை இந்த அம்சம் ஆதரிக்காது. டேப்லெட்டுகள் விஷயத்திலும் இதேதான்.
மேலும் துணை சாதனங்களில் இருந்து லைவ் லொகேஷனை பார்க்க முடியாது என்று WhatsApp குறிப்பிடுகிறது.

Views: - 406

0

0