ஐபோன் 12 போல அந்த தரமான அம்சத்துடன் வரப்போகுது Realme Flash! ஆன்ட்ராய்டு வரலாற்றிலேயே இதுதான் ஃபர்ஸ்ட் டைம் | வெளியானது அறிவிப்பு!

Author: Dhivagar
28 July 2021, 3:04 pm
Like iPhone 12, Realme Flash to feature magnetic wireless charging
Quick Share

ரியல்மீ ஃப்ளாஷ் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனின் வருகைக் குறித்து ரியல்மீ நிறுவனம் முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் ஐபோன் 12 மாடலில் இருந்ததைப் போல மேக்னட்டிக் வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்துடன் வரவுள்ளதாக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேக்னட்டிக் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வெளியாகும் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இது என்ற பெருமையையும் இந்த ஸ்மார்ட்போன் பெறவுள்ளது.

இதுமட்டுமில்லாமல், Gsmarena தளத்தின் வாயிலாக கைபேசியின் ரெண்டர்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் கசிந்தது.

வெளியான கசிவுகளின் படி, சாதனம் பஞ்ச்-ஹோல் வடிவமைப்பு, மூன்று பின்புற கேமராக்கள், ஒரு ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மற்றும் MagDart சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வரும்.

கசிந்த ரெண்டர்களின் படி, ரியல்மீ ஃப்ளாஷ் மெலிதான பெசல்கள் மற்றும் வளைந்த விளிம்புகளுடன் பஞ்ச்-ஹோல் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்பது தெரிகிறது. பின்புறத்தில், இது மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்.

கைபேசியின் திரை அளவு மற்றும் அம்சங்கள் தொடர்பான விவரங்கள் இப்போது தெளிவாக இல்லை.

இருப்பினும், இது முழு-HD+ அல்லது அதிக தெளிவுத்திறன் மற்றும் ஒருங்கிணைந்த கைரேகை சென்சார் கொண்ட உயர் refresh rate உடன் OLED திரையை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

ரியல்மீ ஃப்ளாஷ் ஒரு பெரிய பிரதான சென்சார் மற்றும் அதற்குக் கீழே இரண்டு துணை லென்ஸ்கள் அடங்கிய மூன்று பின்புற கேமரா தொகுதி உடன் பொருத்தப்பட்டிருக்கும். இருப்பினும், அவற்றின் விவரக்குறிப்புகள் இன்னும் தெளிவாக தெரியவில்லை. செல்ஃபிக்களுக்கென, இது ஒரு முன்பக்க கேமராவைக் கொண்டிருக்கும்.

ரியல்மீ ஃப்ளாஷ் ஒரு ஸ்னாப்டிராகன் 888 செயலி உடன் இயக்கப்படும், இது 12 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படும்.

இது ஆண்ட்ராய்டு 11-அடிப்படையிலான ரியல்மீ UI 2.0 உடன் , MagDart சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும், இதில் சார்ஜர் காந்த உதவியுடன்  தொலைபேசியின் பின்புறத்தில் இணைக்கப்பட்டு வயர் இல்லாமல் சார்ஜ் செய்யும்.

இதுவரை வெளியான தகவலின்படி, சார்ஜிங் வேகம் 15W ஐ விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போதைக்கு, ரியல்மீ ஃப்ளாஷ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. இருப்பினும், கைபேசியின் முன்னோட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, விரைவில் இது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 206

0

0