டெஸ்லாவுக்கே போட்டியாகும் இந்திய நிறுவனத்தின் “அஸானி” ஹைப்பர்கார் | விலை எவ்வளவு தெரியுமா?

Author: Dhivagar
5 August 2021, 3:47 pm
Meet Azani, India's first fully-electric hypercar
Quick Share

பெங்களூருவைச் சேர்ந்த மீண் மெட்டல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவின் முதல் முழுமையான மின்சார ஹைப்பர்காரை அறிமுகம் செய்துள்ளது. எதிர்கால வடிவமைப்புகளுடன் உருவாகியுள்ள இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 523 கிமீ வரை செல்லும் திறன் கொண்டது. 

வெறும் 2.1 வினாடிகளில் மணிக்கு 97 கிமீ வேகத்தை எட்டக்கூடியது. அதிகபட்சமாக மணிக்கு 322 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. இதன் விலை சுமார் 89 லட்சம் எனவும் 2022 ஆண்டில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அசானி ஒரு ஸ்கேட்போர்டு அலுமினிய ஸ்பேஸ்ஃப்ரேம் சேசிஸைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது, இது மிகவும் தரமானது என்றும், நீடித்து உழைக்கும் என்றும் விபத்துகளின் போது மிகச்சிறந்த பாதுகாப்பை வழங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த கார் இரண்டு கதவுகள் உடன் மூடிய கிரில், சாய்வான கூரைப்பகுதி, அகலமான சக்கர வளைவுகள், நேர்த்தியான ஹெட்லைட்கள் மற்றும் டெயில் லைட்டுகள் மற்றும் கருப்பு நிறத்தில் பல ஸ்போக் அலாய் வீல்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.

மீண் மெட்டல் மோட்டார்ஸ் நிறுவனம் அஸானிக்கான மாடுலர் காம்போனென்ட்களைப் பயன்படுத்துகிறது, இதன் மூலம் விநியோக விலையில் 25% வரை குறைக்க நிறுவனம் முடிவுச் செய்துள்ளது. இந்நிறுவனம் அதன் தயாரிப்பைத் தயாரிக்க சிறிய ஆலைகளை அமைப்பதையும், செயல்திறனை அதிகரிப்பதற்கும் செலவுகளைக் குறைப்பதற்கும் பல்வேறு நிலைகளில் செயற்கை நுண்ணறிவைப்(AI) பயன்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அஸானி எலக்ட்ரிக் பவர்டிரெயின் உடன் இயக்கப்படுகிறது, இது 1,000 hp அதிகபட்ச சக்தியையும் 1,000 Nm உச்ச திருப்பு விசையையும் உருவாக்கும் திறன் கொண்டது.

இது அதிகபட்சமாக மணிக்கு 322 கிமீ வேகத்தில் செல்லகூடியது  மற்றும் வெறும் 2.1 வினாடிகளில் 0-97 கிமீ வேகத்தை எட்டக்கூடியது.

மேலும், ஹைபர்கார் அதன் 120kWh பேட்டரி பேக் உடன் ஒரு முறை சார்ஜ் செய்தால் 523 கிமீ வரை பயண வரம்பை வழங்கும்.

அசானி மின்சார காரின் உட்புறம் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், இது பல நவீன தொழில்நுட்ப வசதியுடன் 2-சீட்டர் கேபினைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.

வாகனம் ஆக்மென்ட் ரியாலிட்டி உடனான டிஸ்பிளேக்கள், ‘மேம்பட்ட மார்பிங் இருக்கைகள்’ மற்றும் ‘எலக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங்’ ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று வாகன உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், எமர்ஜென்சி பிரேக்கிங், மோதல் தவிர்ப்பு சிஸ்டம் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் கண்டறிதல் போன்ற அம்சங்கள் அடங்கும்.

மீனி மெட்டல் மோட்டார்ஸ் அசானியின் வெளியீட்டிற்கு எந்த காலக்கெடுவையும் வெளியிடவில்லை. ஆனால் முதல் முன்மாதிரி 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைபர்காரின் விலை சுமார் $120,000 அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.89 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு இந்த கார் வேண்டுமென்றால், நிறுவனத்தின் இணையதளத்தில் இப்போதே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Views: - 391

0

0