மிக மெல்லிய நேர்த்தியான வடிவமைப்பில் Mi 11 Lite இந்தியாவில் அறிமுகம் | விவரங்கள் இங்கே

22 June 2021, 3:26 pm
Mi 11 Lite with 6.55-inch FHD+ 90Hz AMOLED display, 6.8mm sleek design launched in India
Quick Share

சியோமி இன்று இந்தியாவில் Mi 11 லைட் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 732G SoC, பின்புறத்தில் 64MP டிரிபிள் கேமராக்கள் மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

இது 6.21 மிமீ தடிமன் மற்றும் 157 கிராம் எடையுடன் 2021 ஆண்டிலேயே மிக மெலிதான மற்றும் இலகுவான ஸ்மார்ட்போன் என்று நிறுவனம் கூறியுள்ளது.

Mi 11 லைட் இரண்டு வகைகளில் வருகிறது. அவற்றில் ஒன்று 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மற்றொன்று 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆகும். இந்த மாடல்கள் முறையே ரூ.21,999 மற்றும் ரூ.23,999 விலைகளில் கிடைக்கிறது. ஜூன் 25 முதல் பிளிப்கார்ட், Mi.Com மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் இருந்து முன்கூட்டிய ஆர்டர் செய்ய இந்த தொலைபேசி கிடைக்கும்.

ஆரம்பகால சலுகையின் ஒரு பகுதியாக, இரண்டு வகைகளும் முறையே ரூ.20,499 மற்றும் ரூ.22,499 விலைகளில் கிடைக்கும். எச்.டி.எஃப்.சி வங்கி கார்டு பயனர்களுக்கு ரூ.15,00 கேஷ்பேக் கிடைக்கும், இதை பயன்படுத்திக் கொண்டால் ஸ்மார்ட்போன் முறையே ரூ.18,999 மற்றும் ரூ.20,999 விலையில் கிடைக்கும்.

MI 11 லைட் விவரக்குறிப்புகள்

Mi 11 லைட் 6.55 அங்குல முழு HD+ (1080 x 2400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே 90 Hz புதுப்பிப்பு வீதத்துடன், 800 நைட்ஸ் உச்ச பிரகாசம் மற்றும் HDR 10 சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உடன் பாதுகாக்கப்படுகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 732G SoC உடன் இயக்கப்படுகிறது, இது 8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி வரை UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Mi 11 லைட் ஒரு மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் 119° அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் டெலிமேக்ரோ சென்சார் ஆகியவை அடங்கும்.. முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அரட்டைகளுக்கு 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

Mi 11 லைட் 4,250mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 33W வேகமான சார்ஜிங் வசதியினை ஆதரிக்கிறது மற்றும் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வருகிறது. இது MIUI 12 உடன் Android 11 இல் இயக்குகிறது. இணைப்பு விருப்பங்களில் இரட்டை 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் v5.1, NFC, GPS மற்றும் சார்ஜ் செய்வதற்கான யூ.எஸ்.பி டைப்-C போர்ட் ஆகியவை அடங்கும்.

Views: - 202

0

0