டர்போபவர் 20 பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் மோட்டோ G60S! கூடுதல் சுவாரசியமாக தகவல்கள் உங்களுக்காக

13 July 2021, 5:55 pm
Moto G60S Expected Price, Key Specifications Leak, Tipped to Launch Soon
Quick Share

மோட்டோ G60S ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு டிப்ஸ்டர் மூலம் வெளியான தகவலின்படி, வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் சில முக்கிய விவரக்குறிப்புகளும் விலையுடன் கசிந்துள்ளது. லெனோவா நிறுவனத்துக்குச் சொந்தமான பிராண்ட் ஆன மோட்டோரோலா, மோட்டோ G60S பற்றிய தகவல்களை வெளியிடவில்லை என்றாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் மட்டுமே இந்த தொலைபேசி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மோட்டோரோலா இந்த ஆண்டு வெண்ணிலா மோட்டோ G60 உட்பட சில மோட்டோ G-சீரிஸ் தொலைபேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றை போலவே இதன் விவரக்குறிப்புகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கசிந்த தகவலின்படி, வரவிருக்கும் மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் விலை யூரோ 300 முதல் யூரோ 320 அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.26,500 முதல் ரூ.28,300 க்குள் இருக்கும் என்று தெரியவந்துள்ளது. ஸ்மார்ட்போன் 8 ஜிபி RAM, 128 ஜிபி RAM மற்றும் ப்ளூ கலர் ஆப்ஷனில் அறிமுகமாகும் என்றும் தெரியவந்துள்ளது. லிஸ்பன் என்ற குறியீட்டு பெயருடனான இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் மோட்டோ G60S என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ G60 விவரக்குறிப்புகள்

மோட்டோ G60 ஆண்ட்ராய்டு 11 உடன் இயங்கும் மற்றும் 120 Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் HDR 10 ஆதரவுடன் 6.8 அங்குல முழு HD+ டிஸ்ப்ளே கொண்டிருக்கும். உட்புறத்தில், இது 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி ஆன் போர்டு ஸ்டோரேஜ் கொண்டது. இது ஒரு ஹைபிரிட் மைக்ரோSD கார்டு வழியாக 1 TB வரை விரிவாக்கக்கூடியது. ஸ்னாப்டிராகன் 732G SoC கொண்டுள்ளது. மோட்டோரோலா 6,000 MaH பேட்டரியை டர்போபவர் 20 ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பேக் செய்கிறது.

கேமராவைப் பொறுத்தவரை, மோட்டோ G60 ஒரு டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் 118 டிகிரி FoV, மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றை கொண்டிருக்கும். தொலைபேசியில் 32 மெகாபிக்சல் செல்ஃபி  கேமரா இருக்கும்.

Views: - 101

0

0