ஸ்னாப்டிராகன் வேர் 4100 சிப், வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் மோட்டோ வாட்ச்!
3 March 2021, 4:02 pmஸ்மார்ட்வாட்ச் சந்தையில் இணையவிருக்கும் சமீபத்திய நிறுவனம் மோட்டோரோலா தான். முன்னதாக, மூன்று மோட்டோரோலா ஸ்மார்ட்வாட்ச்கள் ஆன்லைனில் காணப்பட்டன. நான்காவது மாடலும் இருக்கலாம் என்று புதிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஒரு ரெடிட் பயனர் மூலம் வரவிருக்கும் மோட்டோரோலா மோட்டோ வாட்ச் தொடர்பாக இரண்டு விவரக்குறிப்புகள் கசிந்துள்ளன.
அதன்படி, இந்த மோட்டோ வாட்ச் ஸ்னாப்டிராகன் வேர் 4100 சிப்செட்டிலிருந்து ஆற்றல் பெற்று இயங்கும் என்று கசிவுகள் தெரிவிக்கிறது.
அதே போல பெரும்பாலான ஸ்மார்ட்வாட்ச்களில் வழக்கமாக வரும் சார்ஜிங் அமைப்புகளைப் போலல்லாமல், மோட்டோ வாட்சில் வயர்லெஸ் சார்ஜிங் அமைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் தோற்றத்திலிருந்து, வரவிருக்கும் மோட்டோ வாட்ச் ஆப்பிள் வாட்சுடன் போட்டியிடக்கூடும் என்பதும், இது வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வரும் என்பதும் தெரியவந்துள்ளது. இது தவிர, மோட்டோ வாட்ச் ஜி.பி.எஸ் ஆதரவை கொண்டதாக உள்ளது மற்றும் 5ATM நீர் எதிர்ப்பை வழங்குகிறது.
எதிர்பார்ப்புகள் என்னென்ன?
ஸ்னாப்டிராகன் வேர் 4100 சிப்செட் வேர் 3100 ஐ விட மேம்படுத்தப்பட்ட, சக்திவாய்ந்த செயலியாக வருகிறது. தற்போது, இந்த சிப்செட்டால் இயக்கப்படும் பல அணியக்கூடிய சாதனங்கள் சந்தையில் இல்லை. சந்தையில் அதிகமான பிரீமியம் சாதனங்கள் தற்போது வேர் 3100 சிப்செட் உடன் தான் இயக்குகின்றன, மேலும் இப்போது வேர் 4100 செயலி பயன்படுத்தப்பட்டால் மோட்டோ வாட்ச் சில புதுப்பிக்கப்பட்ட செயல்திறனை வழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கசிந்த படங்களில் வடிவமைப்பில் நுட்பமான குறிப்பையும் தருகின்றன. ஸ்மார்ட்வாட்சில் குறுகிய பெசல்கள், கிரீடம் போன்ற வடிவமைப்பு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் அமைப்பு இருப்பதை நம்மால் காண முடிகிறது.
வெளியான கசிவுகள் உண்மையெனில், மோட்டோரோலாவிலிருந்து மூன்று அல்லது நான்கு ஸ்மார்ட்வாட்ச்கள் விரைவில் வெளியாகக்கூடும். இந்த ஸ்மார்ட்வாட்ச்களில் குறைந்தபட்சம் ஒரு மலிவான சாதனமும் இருக்கும். இவற்றில் குறைந்தபட்சம் ஒரு பிரீமியம் ஸ்மார்ட்வாட்சும் இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்தால் மட்டுமே நம்மால் எதையும் நிரூபணம் செய்ய முடியும்.
0
0