வாட்ஸ்அப்பில் வீடியோவை அனுப்புவதற்கு முன் இப்படி செய்யலாம்! எதிர்பார்க்கப்பட்ட புதிய வசதி அறிமுகம்!

9 February 2021, 10:17 am
New WhatsApp Feature Will Let You Mute Videos Before Sharing
Quick Share

சமீபத்தில், வாட்ஸ்அப் அதன் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையில் புதிய மாற்றங்களை கட்டாயம் ஏற்க வேண்டுமென்று பயனர்களை வலியுறுத்தியதால் ஒரு பின்னடைவை எதிர்கொண்டது. பின்னர், பலரும் வாட்ஸ்அப்பை விட்டு விலகியதால், நிறுவனம் அதற்கான காலக்கெடுவை நீட்டித்தது. 

இவை தவிர, நிறுவனம் தனது பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் பல மாற்றங்களைக் கொண்டுவர முயல்கிறது. வீடியோக்களைப் பகிரும்போது மியூட் செய்யும் விருப்பம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்களில் ஒன்றாகும். இப்போது வாட்ஸ்அப் இந்த அம்சத்தைச் சேர்த்துள்ளது.

வாட்ஸ்அப் மியூட் வீடியோஸ் அம்சம்

WABetaInfo தகவலின் படி, வாட்ஸ்அப் பீட்டா சோதனையாளர்களுக்கு மியூட்  வீடியோஸ் (Mute Videos) என்ற அம்சத்தை வெளியிடுவதற்கு தயாராக உள்ளது. இந்த அம்சம் பயனர்கள் வீடியோக்களைப் பகிர்வதற்கு முன்பு அவற்றை மியூட் செய்ய அனுமதிக்கும். இந்த அம்சம் பீட்டா பதிப்பு 2.21.3.13 இன் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப்பில் உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒரு வீடியோவைப் பகிரும்போது, ஒரு வால்யூம் (Volume) ஐகானைப் பெறுவீர்கள் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. இது Edit மெனுவில் தோன்றும், அதை அழுத்தினால் வீடியோவை மியூட் செய்யலாம். இந்த ஐகானை மீண்டும் அழுத்தும்போது, ​​அசல் வீடியோவில் உள்ள ஒலி மீண்டும் கேட்கும். 

ஒரு வீடியோ கிளிப்பின் முழு ஆடியோவையும் நீங்கள் அனுமதிக்கலாம் அல்லது மியூட் செய்யலாம். ஆனால் வீடியோ கிளிப்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து ஆடியோவை முடக்குவதற்கோ அல்லது அனுமதிப்பதற்கோ வழி இல்லை என்பதும் வெளியான தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது.

மேலும், டெக்ஸ்ட், ஸ்மைலி மற்றும் ஸ்கெட்ச் போன்ற பிற அம்சங்களும் அப்படியே இருக்கின்றன. இப்போதைக்கு, வீடியோக்களைப் பகிர்வதற்கு முன்பு அவற்றை மியூட்செய்ய அனுமதிக்கும் இந்த அம்சம் பீட்டா பதிப்பில் மட்டுமே கிடைக்கிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப்பின் நிலையான பதிப்பில் பயனர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Views: - 0

0

0