நோக்கியா ஸ்ட்ரீமிங் பாக்ஸ் 8000 4K ஆண்ட்ராய்டு டிவி 10 செட்-டாப் பாக்ஸ் அறிமுகம் | விலை & முழு விவரங்கள்

9 November 2020, 9:55 pm
The Nokia Streaming Box 8000 set top box is powered by a quad-core Amlogic S905X3 chipset, with 4 ARM Cortex-A55 cores and ARM Mali-G31 MP2 GPU. It runs Android TV 10 operating system.
Quick Share

நோக்கியா பிராண்டட் ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் நோக்கியா ஸ்ட்ரீமிங் பாக்ஸ் 8000 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ட்ரீமிங் பாக்ஸ் 8000 ஐ ஸ்ட்ரீம்வியூ என்ற ஆஸ்திரிய நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஸ்ட்ரீம்வியூ நிறுவனமானது ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட சில பிராந்தியங்களில் ஸ்ட்ரீமிங் சாதனங்களை விற்க நோக்கியா பிராண்ட் பெயரில் உரிமம் பெற்றுள்ளது.

விலை விவரங்கள் 

நோக்கியா ஸ்ட்ரீமிங் பாக்ஸ் 8000 விலை EUR 100 (தோராயமாக ரூ.8,800) ஆகும். இது கிறிஸ்துமஸுக்கு முன்பு வாங்குவதற்கு கிடைக்கும்.

நோக்கியா ஸ்ட்ரீமிங் பாக்ஸ் 8000 விவரக்குறிப்புகள்

நோக்கியா ஸ்ட்ரீமிங் பாக்ஸ் 8000 செட் டாப் பாக்ஸ் குவாட் கோர் அம்லோஜிக் S905X3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, மேலும் இது 4 ARM கார்டெக்ஸ்-A55 கோர்கள் மற்றும் ARM மாலி-G31 MP2 GPU உடன் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு டிவி 10 இயக்க முறைமை உடன் இயங்குகிறது.

ஸ்ட்ரீமிங் பாக்ஸ் 8000 உங்கள் டிவியில் செருகுவதற்கான HDMI இணைப்பைக் கொண்டுள்ளது, ஆனால் இது உள்ளமைக்கப்பட்ட ஈதர்நெட், யூ.எஸ்.பி 3.0 டைப்-A போர்ட் மற்றும் யூ.எஸ்.பி டைப்-C போர்ட், பிளஸ் ஆப்டிகல் ஆடியோ மற்றும் AV-அவுட் சாக்கெட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சாதனம் டூயல்-பேன்ட் வைஃபை 5 மற்றும் புளூடூத் 4.2 ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ஸ்ட்ரீமிங் சாதனம் பில்ட்-இன் Chromecast மற்றும் கூகிள் உதவியாளர் ரிமோட் கண்ட்ரோலுடன் வருகிறது. ரிமோட்டில் யூடியூப், நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் கூகிள் பிளே ஆகியவற்றிற்கான ஹாட்கீகள் உள்ளன. கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து டிஸ்னி+ மட்டும் இன்ஸ்டால்  பண்ணவேண்டியிருக்கும்போது மற்ற பயன்பாடுகள் முன்பே நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது.

செட்-டாப் பாக்ஸ் 4K ஸ்ட்ரீமிங்கை ஆதரிக்கிறது, இருப்பினும் HDR திறன்களைப் பற்றிய எந்த தகவலும் இல்லை, ஆனால் இது HDR 10 ஐ ஆதரிக்க வேண்டும், ஏனெனில் சாதனத்தின் சிப்செட் இந்த அம்சத்தை ஆதரிக்கிறது. டால்பி விஷன் அல்லது டால்பி அட்மோஸ் ஆதரவு குறித்தும் குறிப்பிடப்படவில்லை.

Views: - 33

0

0

1 thought on “நோக்கியா ஸ்ட்ரீமிங் பாக்ஸ் 8000 4K ஆண்ட்ராய்டு டிவி 10 செட்-டாப் பாக்ஸ் அறிமுகம் | விலை & முழு விவரங்கள்

Comments are closed.