இனி LPG சிலிண்டர்களை வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யலாம்! எப்படினு பார்க்கலாம் வாங்க

4 November 2020, 9:04 am
Now, LPG cylinders can be booked through WhatsApp, check the process here
Quick Share

நவம்பர் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் முறை மாற்றப்பட்டுள்ளது. எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்ய இண்டேன் வாடிக்கையாளர்கள் முன்பு பயன்படுத்திய தொலைபேசி எண்ணும் இப்போது மாறிவிட்டது. கேஸ் ரீஃபில்க்கு முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 என்ற புதிய எண்ணை இண்டேன் அனுப்பியுள்ளது.

இதனுடன் கூடுதலாக ஒரு புதிய தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி இனிமேல் உங்கள் சிலிண்டர்களை வாட்ஸ்அப் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.

 அதெப்படிங்க வாட்ஸ்அப்ல புக் பண்றது? பார்க்கலாம் வாங்க:

  • இண்டேன் வாடிக்கையாளர் இப்போது புதிய எண் ஆன 7718955555 என்பதை அழைப்பதன் மூலம் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். 
  • அதே போல 7588888824 என்ற எண்ணை Save செய்து கொள்ளுங்கள். 
  • இப்போது, வாட்ஸ்அப் மெசஞ்சரில் REFILL என டைப் செய்து 7588888824 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். 
  • இவ்வாறு அனுப்பும்போது உங்கள் சிலிண்டர்  புக் ஆகிவிடும்.
  • அதேநேரத்தில், வாடிக்கையாளர்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மட்டுமே செய்தியை அனுப்ப வேண்டும் என்பதையும் மறக்காமல் நினைவில் கொள்ள வேண்டும்.

அவ்வளவுதாங்க!

Views: - 23

0

0

1 thought on “இனி LPG சிலிண்டர்களை வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யலாம்! எப்படினு பார்க்கலாம் வாங்க

Comments are closed.