“நீங்களும் பெட்ரோல் கார் தானே வச்சிருக்கீங்க…” | திடீரென கேட்ட கேள்விக்கு ஓலா நிறுவன தலைவரின் கூல் பதில்! வரப்போகுது ஓலா மின்சார கார்?!
Author: Hemalatha Ramkumar19 August 2021, 3:41 pm
ஓலா நிறுவனம், கடந்த 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. அதையடுத்து, பெட்ரோல் வாகனங்களைத் தவிர்த்து, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாறவேண்டுமென்று ஓலா நிறுவன தலைவர் அறிவுறுத்தினார். அதற்கு பதிலளித்த ட்விட்டர் பயனர் ஒருவர், நீங்களும் பெட்ரோல் காரை தானே பயன்படுத்துறீங்க, இல்ல மின்சார கார் இருக்கிறதா? என்று கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த ஓலா நிறுவன தலைவர், இரண்டு வருடங்களுக்கு முன்பு வர பெட்ரோல் கார் தான் வைத்திருந்தேன், ஆனால் இப்போது இல்லை. இப்போது ஹைபிரிட் கார் பயன்படுத்துகிறேன். விரைவில் ஓலா எலெக்ட்ரிக் காருக்கு மாறிவிடுவேன் என்று தெரிவித்தார்.
அது மட்டுமில்லாமல் ஓலா எலெக்ட்ரிக் கார் எப்போது வெளியாகும் என்பதற்கான குறிப்பையும் கொடுத்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின்படி, ஓலா எலக்ட்ரிக் கார் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்திய நுகர்வோரிடமிருந்து அதிக அளவில் நேர்மறையான வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஓசூர் ஆலையில் மின்சார ஸ்கூட்டர் தயார் செய்யப்படுவது போல, மின்சார கார்களும் இங்கு தான் கட்டமைக்கப்படுமா, உருவாக்க பணிகள் எப்போது துவங்கும், என்ன மாதிரியான டிசைனைக் கொண்டிருக்கும் என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதே போல ஓலா ஸ்கூட்டர் வாடகை சவாரிகளுக்கு மட்டும் பயன்படுமா அல்லது அனைத்து பயனர்களுக்கு விற்பனை செய்யப்படுமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இப்போதைக்கு ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அடுத்து ஓலா எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
0
0