ரியல்மீ பட்ஸ் 2 நியோ இயர்போன்ஸ், டிரிம்மர் மற்றும் ஹேர் ட்ரையர் எல்லாம் இந்தியாவில் அறிமுகமாகியிருக்கு | விலை & விவரங்கள்

5 July 2021, 5:05 pm
Realme Buds 2 Neo earphones, trimmer and hair dryer launched in India
Quick Share

ரியல்மீ நிறுவனம் அதன் AIoT வரிசையை விரிவுபடுத்தும் நோக்கில், ரியல்மீ ஒரு டிரிம்மர், ஹேர்டிரையர் மற்றும் ரியல்மீ பட்ஸ் 2 நியோ வயர்டு இயர்போன்ஸ் ஆகியவற்றை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பியர்ட் டிரிம்மர் தொடரின் கீழ் இரண்டு தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன, இதில் ரியல்மீ பியர்ட் டிரிம்மர் மற்றும் ரியல்மீ பியர்ட் டிரிம்மர் பிளஸ் ஆகியவை அடங்கும்.

ரியல்மீ பியர்ட் டிரிம்மரின் விலை ரூ.1,299 ஆகவும் மற்றும் ரியல்மீ பியர்ட் டிரிம்மர் பிளஸின் விலை ரூ.1,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களும் ஜூலை 5 முதல் ரியல்மீ வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும். அதன் பிறகு இந்த தயாரிப்புகள் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும். 

ரியல்மீ ஹேர் ட்ரையரின் விலை ரூ.1,999 ஆகும், இது ஜூலை 5 ஆம் தேதி பிளிப்கார்ட் மற்றும் நிறுவனத்தின் வலைத்தளத்திலிருந்து மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும்.

ரியல்மீ பட்ஸ் 2 நியோவின் விவரக்குறிப்புகள்

11.2 மிமீ டைனமிக் டிரைவர் ரியல்மீ பட்ஸ் 2 நியோவில் கொடுக்கப்பட்டுள்ளது, இது ஆழமான பாஸுக்கு உறுதி அளிக்கும். இசையை கட்டுப்படுத்த அதில் பொத்தான்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது தவிர, 90 டிகிரி கோணத்தில் 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் உள்ளது. சிறந்த அழைப்பு சேவைக்கு இது உள்ளடிக்கிய HD மைக்ரோஃபோனைக் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.499 ஆகும்.

ரியல்மீ பியர்ட் டிரிம்மர் தொடரின் அம்சங்கள்

ரியல்மீ பியர்ட் டிரிம்மர் 10 மிமீ சீப்பு மற்றும் 20 நீள அமைப்புகளுடன் வருகிறது. அதன் கத்திகள் ஸ்டீல் மூலம் செய்யப்பட்டவை. ரியல்மீ பியர்ட் டிரிம்மர் பிளஸ் 10 மிமீ மற்றும் 20 மிமீ சீப்பு மற்றும் 40 வெவ்வேறு நீள அமைப்புகளுடன் வருகிறது. இரண்டு டிரிம்மர்களும் 0.5 மிமீ வரை ஒழுங்கமைக்கும் திறன் கொண்டவை. ரியல்மீ பியர்ட் டிரிம்மர் பிளஸ் இரண்டு ஸ்டீல் பிளேட்களைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், இது தண்ணீரை எதிர்க்கும் IPX 7 மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

ரியல்மீ பியர்ட் டிரிம்மர் மற்றும் ரியல்மீ பியர்ட் டிரிம்மர் பிளஸ் ஆகியவற்றில் 800 mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது, இதன் மூலம் 120 நிமிட இயக்கம் வழங்கக்கூடியதாக இருக்கும். இரண்டு டிரிம்மர்களும் பேட்டரி லெவல் அறிய LED குறிகாட்டிகளையும் சார்ஜ் செய்ய டைப்-C போர்ட்டையும் கொண்டிருக்கும்.

ரியல்மீ ஹேர் ட்ரையரின் அம்சங்கள்

ரியல்மீ ஹேர் ட்ரையர் 1,400W ஆற்றல் கொண்டது மற்றும் அதன் மோட்டர் 19,000 rpm திறன் கொண்டது. காற்றின் ஓட்டத்திற்கு இரண்டு வேக முறைகள் இருக்கும். இந்த ஹேர் ட்ரையரில் மேம்பட்ட எதிர்மறை அயனி தொழில்நுட்பம் உள்ளது, இது ஒரு கன சென்டிமீட்டருக்கு 20 மில்லியன் எதிர்மறை அயனிகளை உருவாக்குகிறது. இதன் உடலும் ABS ஆல் ஆனது.

Views: - 105

0

0