ஸ்னாப்டிராகன் 460 SoC, குவாட் ரியர் கேமராக்களுடன் ரியல்மீ C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்

21 September 2020, 5:40 pm
Realme C17 announced with Snapdragon 460 SoC, Quad Rear Cameras
Quick Share

ரியல்மீ நிறுவனம் இன்று ரியல்மீ C17 ஸ்மார்ட்போனை பங்களாதேஷில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரியல்மீ C17 ஒற்றை 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டிற்கு BDT 15,990 (தோராயமாக ரூ.13,800) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது லேக் கிரீன் மற்றும் நேவி ப்ளூ கலர் விருப்பங்களில் வருகிறது.

ரியல்மீ C17 6.5 இன்ச் HD+ ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே 720×1,600 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 90 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி-ரேஷியோ மற்றும் 600 நைட்ஸ் அதிகபட்ச பிரகாசத்தைக் கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 SoC உடன் இணைந்து அட்ரினோ 610 GPU உடன் இயக்கப்படுகிறது. ரியல்மீ C17 ஆண்ட்ராய்டு 10 க்கு மேல் ரியல்மீ UI உடன் இயங்குகிறது.

கேமராக்களைப் பொறுத்தவரை, ரியல்மீ C17 இல் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பு, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா 119 டிகிரி ஃபீல்ட்-வியூ, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2- மெகாபிக்சல் கருப்பு மற்றும் வெள்ளை சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, எஃப் / 2.0 லென்ஸுடன் 8 மெகாபிக்சல் சென்சார் உள்ளது.

ரியல்மீ C17 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது யூ.எஸ்.பி-C மூலம் 18W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும். இணைப்பு விருப்பங்களில் எல்.டி.இ, வைஃபை, புளூடூத் 5.0, ஜி.பி.எஸ் / ஏ-ஜி.பி.எஸ், 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-C போர்ட் ஆகியவை அடங்கும். ரியல்மீ C17 164.1×75.5×8.9 மிமீ அளவுகளையும் மற்றும் 188 கிராம் எடையையும் கொண்டிருக்கும்.

Views: - 0

0

0