மீடியாடெக் டைமன்சிட்டி 800U, 48 MP கேமராக்களுடன் ரியல்மீ Q2, Q2 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் | முழு விவரம் அறிக

Author: Dhivagar
13 October 2020, 2:07 pm
Realme Q2, Q2 Pro announced with MediaTek Dimensity 800U, 48MP cameras
Quick Share

ரியல்மீ நிறுவனம் Q-சீரிஸில் ரியல்மீ Q2 மற்றும் ரியல்மீ Q2 புரோ ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் மீடியாடெக் டைமன்சிட்டி 800U சிப்செட் 5 ஜி ஆதரவுடன் மற்றும் ஆண்ட்ராய்டு 10 ரியல்மீ UI உடன் இயக்கப்படுகின்றன.

ரியல்மீ Q2 நீலம் மற்றும் வெள்ளி வண்ணங்களில் வருகிறது, ரியல்மீ Q2 ப்ரோ C-கலர் (கலர் கிரேடியன்ட்) மற்றும் லைட் டைட் கிரே வண்ண வகைகளில் வருகிறது.

ரியல்மீ Q2 மற்றும் ரியல்மீ Q2 Pro விலைகள்

ரியல்மீ Q2 4 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை 1299 யுவான் (தோராயமாக ரூ.14,200) மற்றும் ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை 1399 யுவான் (தோராயமாக ரூ.15,200) ஆகும்.

ரியல்மீ Q2 ப்ரோ 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை 1799 யுவான் (தோராயமாக ரூ.19,550), 8 ஜிபி + 256 ஜிபி விலை 1999 யுவான் (தோராயமாக ரூ. 21,720) ஆகும்.

ரியல்மீ Q2 விவரக்குறிப்புகள்

ரியல்மீ Q2 6.5 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) 120 Hz புதுப்பிப்பு வீதத்துடன் முழு HD+ LCD திரையைக் கொண்டுள்ளது. இந்த தொலைபேசியை மீடியாடெக் டைமன்சிட்டி 800 U சிப்செட் உடன் இயக்கப்படுகிறது, இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இயக்கப்படுகிறது.

கேமரா பிரிவில், ரியல்மீ Q2 டிரிபிள் கேமரா அமைப்புடன் 48 மெகாபிக்சல்கள் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் கேமரா உடன் 119 ° அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல்கள் கேமரா உடன் 4 cm மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்திற்கு, 16 மெகாபிக்சல்கள் செல்பி கேமரா உள்ளது.

ரியல்மீ Q2 ஒரு மிகப்பெரிய 5,000 mAh பேட்டரியை 30W டார்ட் சார்ஜ் வேகமாக சார்ஜ் செய்கிறது. இது ஆண்ட்ராய்டு 10 இல் ரியல்மீ UI உடன் இயங்குகிறது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.

இணைப்பு விருப்பங்கள் 5G SA / NSA, இரட்டை 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5, GPS / GLONASS / Beidou, USB Type-C மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பரிமாணங்களைப் பொறுத்தவரை 162.2 × 75.1 × 9.1 மிமீ அளவுகளையும் மற்றும் 194 கிராம் எடையையும் கொண்டுள்ளது.

ரியல்மீ Q2 Pro விவரக்குறிப்புகள்

ரியல்மீ Q2 ப்ரோ 6.4-இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) முழு எச்டி + அமோலெட் டிஸ்பிளே 600 நைட்ஸ் அதிகபட்ச பிரகாசத்தையும் 180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்தையும் வழங்குகிறது. இது இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனருடன் வருகிறது.

இந்த தொலைபேசியை மீடியாடெக் டைமன்சிட்டி 800U சிப்செட் உடன் இயக்கப்படுகிறது, இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் உதவும்.

ரியல்மீ Q2 ப்ரோ பின்புறத்தில் ஒரு குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48 மெகாபிக்சல்கள் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல்கள் 119 ° அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் எஃப் / 2.3 துளை, 2 மெகாபிக்சல்கள் மேக்ரோ கேமராக்கள் மற்றும் ஒரு எஃப் / 2.4 துளை கொண்ட 2 மெகாபிக்சல்கள் B/W போர்ட்ரெய்ட் லென்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. முன்பக்கத்திற்கு, எஃப் / 2.1 துளை கொண்ட 16 மெகாபிக்சல்கள் செல்பி கேமரா உள்ளது.

ரியல்மீ Q2 ப்ரோ 4300 எம்ஏஎச் பேட்டரியை 65W சூப்பர் டார்ட் சார்ஜ் வசதியுடன் வேகமாக சார்ஜ் செய்கிறது. இது ஆண்ட்ராய்டு 10 இல் ரியல்மீ UI உடன் இயங்குகிறது. 

இணைப்பு விருப்பங்களில் 5G SA / NSA, இரட்டை 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5, GPS / GLONASS / Beidou, USB Type-C மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளது. பரிமாணங்களில் 160.9 × 74.4 × 8.1 மிமீ அளவுகளையும் மற்றும் 175 கிராம் எடையையும் கொன்னுடுள்ளது.

Views: - 66

0

0