குறைவான விலையில் கிடைக்கிறது ரெட்மி 9A | எப்படி வாங்கலாம்? எங்கு வாங்கலாம்?

19 October 2020, 8:26 pm
Redmi 9A Price At Flipkart Big Billion Days Sale
Quick Share

சியோமி ரெட்மி 9 சீரிஸ் பிராண்டின் மிக வெற்றிகரமான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். ரெட்மி 9A அதன் சிறந்த பேட்டரி மற்றும் திறமையான செயலிக்கு பெயர் பெற்றது. ஆனால் மிக முக்கியமாக, விலை தான் வாங்குபவர்களை ஈர்க்கிறது. பிளிப்கார்ட் பிக் பில்லியன் நாட்கள் விற்பனையின் போது ரெட்மி 9A வை தள்ளுபடி விலையில் வழங்குகிறது.

பிளிப்கார்ட்டில் ரெட்மி 9A விலை

தற்போது நடைபெற்று வரும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் நாட்கள் விற்பனை ஸ்மார்ட்போன்கள் உட்பட பல சாதனங்களில் மிகப்பெரிய விலைக் குறைப்பை வழங்கியுள்ளது. ரூ.8,499 விலைக்கொண்ட ரெட்மி 9A, இப்போது ரூ.7,487 விலையில் வாடிக்கையாளர்களுக்கு 11 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த விலையானது நேச்சர் கிரீன் கலர் ஆப்ஷனுடன் 2 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டுக்கானது.

ரெட்மி 9A 3 ஜிபி ரேம் வேரியண்டிலும் கிடைக்கிறது, இது பிளிப்கார்ட்டில் தள்ளுபடி சலுகையையும் கொண்டுள்ளது. இந்த மாடல் முதலில் ரூ.9,499 விலைக்கொண்டிருந்தது. இப்போது பிளிப்கார்ட் பிக் பில்லியன் நாட்கள் விற்பனையில் 8,870 ரூபாய் விலைக்கு கிடைக்கிறது. ரெட்மி 9A 3 ஜிபி ரேம் விருப்பத்திற்கு ஆறு சதவீதம் தள்ளுபடி உடன் கிடைக்கிறது.

ரெட்மி 9A அம்சங்கள்

ரெட்மி 9A பிரபலமான பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் ரூ.10,000 விலைக்குள் கிடைக்கிறது. தொலைபேசி 6.5 அங்குல LCD திரை U-வடிவ நாட்ச் மற்றும் செல்ஃபி கேமராவிற்கான வாட்டர் டிராப் கட்அவுட்டைக் கொண்டுள்ளது. கேமராக்களைப் பற்றி பேசுகையில், LED ப்ளாஷ் உடன் இணையாக ஒற்றை 13 MP பிரைமரி ஷூட்டரைக் கொண்டுள்ளது. 5MP செல்ஃபி ஷூட்டரும் உள்ளது.

ரெட்மி 9A 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி டீஃபால்ட் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட மீடியா டெக் ஹீலியோ G25 செயலியில் இருந்து ஆற்றலைப் பெறுகிறது. மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்று பெரிய 5,000 mAh பேட்டரி ஆகும், இது ஒரு நாள் முழுவதும் நீடிக்கும். தொலைபேசி ஆண்ட்ராய்டு 10 ஐ MIUI 11 தனிபயன் ஸ்கின் உடன் இயக்குகிறது.

Views: - 25

0

0