சூரிய சக்தியை உறிஞ்சி 18 ஆண்டுகளுக்கு சேமிக்கும் திரவம் கண்டுபிடிப்பு!

29 March 2021, 5:22 pm
Researchers Develop Liquid That Absorbs And Stores Solar Energy For 18 Years
Quick Share

புதைபடிவ எரிபொருள்கள் நம் பூமியில் குறைந்துவிட்ட பிறகு சூரிய ஆற்றல் தான் எதிர்கால ஆற்றல் மூலமாக இருக்கும் என்பது அறிந்த ஒன்றுதான்.

இருப்பினும், சூரிய ஆற்றலைப் பொறுத்தவரை ஓரிரு சவால்கள் உள்ளது. ஏனென்றால் இது பகலில் மட்டுமே கிடைக்கும் மற்றும் இந்த ஆற்றலை நீண்ட கால பயன்பாட்டிற்காக சேமிப்பதற்கான ஒரு நிலையான சாதனம் தேவை.

என்னதான் முதல்  சவாலை இயற்கையான நிகழ்வு என்றாலும், ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு இரண்டாவது சவாலுக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் “சூரிய வெப்ப எரிபொருளை” (Solar Thermal Fuel) உருவாக்கியுள்ளனர். இது ஒரு சிறப்பு வகையான எரிபொருளாகும், இது சூரியனின் ஆற்றலை 18 ஆண்டுகள் வரை சேமிக்கும் திறன் கொண்டது. ஸ்வீடனில் உள்ள சால்மர்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழக ( Chalmers University of Technology in Sweden) ஆராய்ச்சியாளர்களால் இது ஒரு வருடத்திற்கும் மேலாக வளர்ச்சிப் பணிகளில் உள்ளது.

சூரிய சக்தியை சேமிக்க உதவும் சாதனம் MOST (Molecular Solar Thermal Energy Storage System) என அழைக்கப்படுகிறது, இது மூலக்கூறு சூரிய வெப்ப ஆற்றல் சேமிப்பு அமைப்பைக் குறிக்கிறது. இது ஒரு சுழற்சி முறையில் செயல்படுகிறது, இதில் ஒரு பம்ப் வெளிப்படையான குழாய்கள் மூலம் எரிபொருளை சுழற்சி செய்கிறது.

அவை சூரிய ஒளியுடன் தொடர்பு கொள்ளும்போது, ​​அணுக்களுக்கு இடையிலான பிணைப்புகள் ஆற்றல் நிறைந்த ஐசோமர்களாக மாறுகின்றன. சூரியனில் இருந்து வரும் ஆற்றல் இந்த வலுவான இரசாயன பிணைப்புகளில் சேமிக்கப்படுகிறது. ஆச்சரியம் என்னவென்றால், அறை வெப்பநிலையில் திரவம் குளிர்ந்த பிறகும் இந்த ஆற்றல் வலுவாக உள்ளது.

சிக்கியுள்ள இந்த ஆற்றலைப் பயன்படுத்த, ஆராய்ச்சி குழு உருவாக்கிய ஒரு வினையூக்கி மூலம் திரவம் வேதியியல் செயல்பட்டுக்குள் செல்கிறது, இது திரவத்தை 63 டிகிரி செல்சியஸ் வெப்பமாக்கும் எதிர்வினை உருவாக்குகிறது. இது செயல்முறையை துவக்குகிறது, மூலக்கூறு அதன் அசல் வடிவத்திற்குத் திரும்புகிறது மற்றும் ஆற்றலை வெப்ப வடிவத்தில் வெளியிடுகிறது.

இந்த வெப்பம் ஒரு கட்டிடத்தின் வாட்டர் ஹீட்டர், பாத்திரங்கழுவும் சாதனம் போன்று நீரை சூடாக்குதல் போன்ற பயன்பாடுகளுக்கு நீரை வெப்பப்படுத்த பயன்படுத்தலாம். இது தொழில்துறை பயன்பாடுகளான சுத்திகரித்தல், வடிகட்டுதல் மற்றும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் குறைந்த வெப்பநிலை போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்படலாம்.

அதே திரவத்தை மீண்டும் MOST சாதனத்தினுள் செலுத்தி மீண்டும் சூரிய சக்தியைச் சேகரித்து மீண்டும் பயன்படுத்தலாம். ஆராய்ச்சியாளர்கள் அதே திரவத்தை 125 தடவைகளுக்கு மேல் மீண்டும் பயன்படுத்தியுள்ளனர் மற்றும் அதன் மூலக்கூறு கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் காணவில்லை.

ஆய்வுக் குழுவின் தலைவரான, வேதியியல் மற்றும் வேதியியல் பொறியியல் துறையின் பேராசிரியர் காஸ்பர் மோத்-பவுல்சன் கூறுகையில், திரவத்தின் உச்ச திறனில், இது ஒரு கிலோகிராமிற்கு 250 வாட்-மணிநேர ஆற்றலை சேமிக்கும் திறன் கொண்டது அதாவது கிட்டத்தட்ட டெஸ்லா பவர்வால் பேட்டரிகள் இரண்டு முறை செய்யக்கூடியதை இதுவும் செய்யும்.

இப்போதைக்கு, சால்மர்ஸின் ஆராய்ச்சியாளர்கள் அதன் பெரிய அளவிலான செயல்பாடுகளுக்காக தொழில்நுட்பத்தின் முன்மாதிரிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 4.3 மில்லியன் யூரோக்கள் நிதியைப் பெற்றுள்ளனர், இது மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 3

1

0