ஏர்டெல் வழங்கும் இந்த திட்டத்துடன் ரூ.4 லட்சம் ஆயுள் காப்பீடு கிடைக்கும்! தெரியுமா உங்களுக்கு?

15 May 2021, 5:25 pm
Rs 4 lakh life insurance, unlimited internet and more at just
Quick Share

இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் பயனர்களை கவர்ந்திழுக்க தங்கள் திட்டங்களுடன் பல கூடுதல் சலுகைகளையும் வழங்குகின்றன. அந்த வகையில் ஏர்டெல் ஒரு படி மேலே சென்று, இரண்டு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இது வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்பு மற்றும் அதிவேக 4ஜி இணைய சேவை ஆகியவற்றுடன் சேர்த்து ஆயுள் காப்பீட்டு சலுகையையும் வழங்குகிறது.

ஏர்டெல் வழங்கும் ரூ.279 மற்றும் ரூ.179 திட்டங்களுடன் ஆயுள் காப்பீட்டு திட்டத்தையும் வழங்குகிறது.

ரூ.279 க்கு 4 லட்சம் காப்பீடு

ஏர்டெல்லின் ரூ.279 திட்டம் அனைத்து நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற அழைப்பு சேவையையும் தினமும் 1.5 ஜிபி அதிவேக 4ஜி டேட்டாவையும் வழங்குகிறது. தினசரி 1.5 ஜிபி டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு அதிவேக இணைய வேகம் குறைகிறது. ஆனால் திட்டத்தின் சிறந்த பகுதி என்னவென்றால், வாடிக்கையாளர்கள் ரூ.4 லட்சம் மதிப்புள்ள ஆயுள் காப்பீட்டை இந்த திட்டத்துடன் பெறுகிறார்கள்.

திட்டத்துடன் பயனர்கள் தினமும் 100 எஸ்எம்எஸ் பெறுவார்கள். இந்த திட்டத்துடன் ஆயுள் காப்பீட்டைப் பெறுவதற்கு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சான்றுகள் எதுவும் தேவையில்லை என்பது கூடுதல் சுவாரஸ்யமான விஷயம். அதுமட்டுமில்லாமல், ஏர்டெல் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் திட்டத்துடன் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தாவையும் வழங்குகிறது.

ரூ. 179 க்கு 2 லட்சம் ஆயுள் காப்பீடு

அதே நேரத்தில், ஏர்டெல்லின் ரூ.179 ரீசார்ஜ் திட்டம் ரூ.2 லட்சம் மதிப்பில் ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். பயனர்கள் தினசரி 2 ஜிபி அதிவேக 4ஜி இணைய சேவையைப் பெறுவார்கள், எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற அழைப்புடன் தினமும் 300 SMS களும் கிடைக்கும்.

இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் இலவச சந்தா வழங்கப்படும். தினசரி 2 ஜிபி வரம்பு தீர்ந்த பிறகு அதிவேக இணைய வேகம் குறைக்கப்படும்.

Views: - 182

0

0