Samsung Galaxy F02s: இந்த சாம்சங் போன் வாங்கணுமா? முதல் விற்பனையை மிஸ் பண்ணிடாதீங்க

9 April 2021, 10:27 am
Samsung Galaxy F02s first sale to take place today
Quick Share

சாம்சங் நிறுவனம் பிளிப்கார்ட் உடன் கூட்டணி அமைத்து கேலக்ஸி F தொடரில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்த வார தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. கேலக்ஸி F02s மற்றும் கேலக்ஸி F12 ஆகிய இரண்டு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களும் ரூ.11,999 க்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன. இரண்டில் மிகவும் மலிவு விலையிலான கேலக்ஸி F02s ஸ்மார்ட்போன் முதல் முறையாக இன்று விற்பனைக்கு வரவுள்ளது.

கேலக்ஸி F02s ஸ்மார்ட்போனின் விற்பனை பிளிப்கார்ட் மற்றும் சாம்சங்கின் ஆன்லைன் ஸ்டோர்களில் நடைபெறும். அதனுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை கடைகளில் கிடைக்கும். 

  • கேலக்ஸி F02s 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடலுக்கான விலை ரூ.8,999 முதல் தொடங்குகிறது. 
  • 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட கேலக்ஸி F02s விலை ரூ.9,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
  • இது டயமண்ட் பிளாக், டயமண்ட் ப்ளூ மற்றும் டயமண்ட் ஒயிட் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

இதன் விவர்க்குறிப்புகளைப் பொறுத்தவரை, கேலக்ஸி F02s 6.5 இன்ச் HD+ (720×1,600 பிக்சல்கள்) இன்ஃபினிட்டி-V டிஸ்ப்ளே 20:9 திரை விகிதத்துடன் கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 செயலி 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் 1TB வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பிற்கான மைக்ரோ SD கார்டு ஸ்லாட்டும் உள்ளது.

13 MP முதன்மை சென்சார், 2 MP ஆழம் சென்சார் மற்றும் 2 MP மேக்ரோ கேமரா உட்பட மூன்று கேமராக்கள் உள்ளன. ஸ்மார்ட்போனில் செல்ஃபிக்களுக்காக 5 MP முன் கேமரா உள்ளது. கேலக்ஸி F02s லைவ் ஃபோகஸ் அம்சத்தையும் கொண்டுள்ளது.

இந்த சாதனம் 5000 mAh பேட்டரி உடன் ஆதரிக்கப்படுகிறது மற்றும் 15W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. மென்பொருள் முன்னணியில், கேலக்ஸி F02s ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான One UI 2.5 ஐ இயக்குகின்றன. 

கேலக்ஸி F02s வயர்டு மற்றும் புளூடூத் ஹெட்செட்களில் டால்பி அட்மோஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. இதன் இணைப்பு விருப்பங்களில் வைஃபை, 4 ஜி LTE, 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-C போர்ட் ஆகியவை அடங்கும்.

Views: - 65

0

0