சாம்சங் கேலக்ஸி M02 போனின் விலையில் திடீர் மாற்றம் | புதிய விலை எவ்ளோ தெரியுமா?

14 July 2021, 2:50 pm
Samsung Galaxy M02 price hiked again in India
Quick Share

சாம்சங் தனது கேலக்ஸி M02 ஸ்மார்ட்போனின் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. கடந்த வாரம் சாம்சங் தனது கேலக்ஸி F02s, கேலக்ஸி M02 மற்றும் கேலக்ஸி A12 போன்களின் விலைகளை உயர்த்தியதை அடுத்து இப்போது இந்த கேலக்ஸி M02 ஸ்மார்ட்போனின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.500 புதிய விலை உயர்வுக்குப் பிறகு, கேலக்ஸி M02 விலை இப்போது ரூ.7,999 முதல் ஆரம்பம் ஆகிறது. இந்த விலை 2 ஜிபி RAM + 32 ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய அடிப்படை மாடலுக்கானது.

சாம்சங் கேலக்ஸி M02 இன் புதிய விலை இப்போது சாம்சங் இந்தியா வலைத்தளம் மற்றும் அமேசான் தளத்தில் பிரதிபலிக்கிறது. இது ஆஃப்லைன் கடைகளுக்கும் பொருந்தும். இந்த விலை உயர்வு பற்றிய கூடுதல் விவரங்களை பார்ப்போம்:

சாம்சங் கேலக்ஸி M02 போன் இந்தியாவில் 2 ஜிபி RAM + 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ.6,999 விலையுடனும் மற்றும் 3 ஜிபி RAM + 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ.7,499 விலையுடனும் அறிமுகம் செய்யப்பட்டது. மார்ச் மாதத்தில், சாம்சங் கேலக்ஸி M02 விலையை ரூ.500 உயர்த்தியது. அப்போது அதன் பிறகு 2 ஜிபி மற்றும் 3 ஜிபி மாடல்களின் விலை முறையே ரூ.7,499 மற்றும் ரூ.7,999 உயர்ந்தது.

இப்போது மீண்டும் நிறுவனம் M02 இன் விலையை ரூ.500 அதிகரித்துள்ளது. இப்போது விலை உயர்வுக்குப் பிறகு, 2 ஜிபி RAM + 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.7,999 ஆகவும், 3 ஜிபி RAM கொண்ட மாடலின் விலை ரூ.8,499 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி M02 விவரக்குறிப்புகள்

சாம்சங் கேலக்ஸி M02 6.5 இன்ச் HD+ இன்ஃபினிட்டி-V டிஸ்ப்ளே 1560 x 720 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் கொண்டுள்ளது. இந்த தொலைபேசி 1.5GHz இல் கிளாக் செய்யப்பட்ட Mediatek MT6739 குவாட் கோர் SoC உடன் இயக்கப்படுகிறது.

தொலைபேசியில் 3 ஜிபி RAM மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்டு உதவியுடன் 1TB வரை விரிவாக்கலாம். தொலைபேசி இரட்டை பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது. எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் கொண்ட 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் இதில் உள்ளது. முன்பக்கத்தில், 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

தொலைபேசி சாம்சங் ஒன் UI உடன் ஆண்ட்ராய்டு 10 இல் இயக்குகிறது, மேலும் இது 5000 mAh பேட்டரி உடன் இயக்கப்படுகிறது. இந்த தொலைபேசியில் கைரேகை ஸ்கேனர் இல்லை.

இணைப்பு அம்சங்களில், இது இரட்டை 4 ஜி VoLTE, Wi-Fi 802.11 b / g / n, புளூடூத் 5, 3.5 மிமீ ஆடியோ ஜாக், GPS, GLONASS மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது. தொலைபேசி 164.0 x 75.9x 9.1 மிமீ அளவுகளையும் மற்றும் 206 கிராம் எடையையும் கொண்டுள்ளது.

Views: - 207

0

0