அசத்தலான ஆஃபர்களுடன் Samsung Galaxy Z Fold3, Galaxy Z Flip3 போன் வாங்கணுமா? முன்பதிவு ஸ்டார்ட் ஆகிடுச்சு!

Author: Hemalatha Ramkumar
24 August 2021, 1:05 pm
Samsung Galaxy Z Fold3 and Flip3's pre-bookings begin in India
Quick Share

சாம்சங் சமீபத்தில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி Z ஃபோல்டு 3 மற்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 ஆகியவற்றை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவுகள் இப்போது நிறுவனத்தின் இணையதளத்தில் துவங்கியுள்ளது.

தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் கூடுதல் சாம்சங் கேர்+ விபத்து மற்றும் திரவ சேதம் பாதுகாப்பு திட்டத்தை வழங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 3 போனின் 12GB/256GB மாடலுக்கு ரூ.1,49,999 விலையும் மற்றும் 12GB/512GB மாடலுக்கு ரூ.1,57,999 விலையும் நிர்ணயம் செய்துள்ளது.

அதே சமயம் சாம்சங் ஃபிளிப் 3 போனின் 8 ஜிபி/128 ஜிபி மாடலுக்கான விலை ரூ.84,999 ஆகவும் மற்றும் 8GB/256GB மாடலுக்கான விலை ரூ.89,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முன்கூட்டிய ஆர்டர் செய்யும்போது கிடைக்கும் சலுகைகளின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் எச்டிஎப்சி வங்கி கார்டுகள் உடன் ரூ.7,000 மதிப்புள்ள கேஷ்பேக் அல்லது ரூ.7,000 மதிப்புள்ள அப்கிரேடு வவுச்சர் ஆகியவை கிடைக்கும்.உங்கள் ஸ்மார்ட்போனின் பரிமாற்ற மதிப்புக்கு மேல் ரூ.7,000 வரை கூடுதல் தள்ளுபடிகளையும் பெற முடியும்.

கூடுதலாக, நிறுவனம் சாம்சங் கேர்+ 1 ஆண்டு விபத்து மற்றும் திரவ சேதம் பாதுகாப்பு சந்தாவை (ரூ.4,799 மதிப்பு) இலவசமாக வழங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 3 விவரக்குறிப்புகள்

Samsung Galaxy Z Fold3 and Flip3's pre-bookings begin in India
 • சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 3 6.2 இன்ச் AMOLED கவர் டிஸ்பிளே கொண்டுள்ளது, இது 2262 x 832 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 10MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. 
 • நீங்கள் சாதனத்தைத் திறக்கும்போது, ​​7.8 அங்குல மடிக்கக்கூடிய AMOLED பேனல் இருக்கும், இது 2208 x 1768 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்டிருக்கும்.
 • இதில் 4 MP இன்-ஸ்கிரீன் கேமரா இருக்கும். இரண்டு டிஸ்பிளேவும் 120 Hz refresh rate ஐ கொண்டுள்ளன.
 • கேலக்ஸி Z ஃபோல்டு 3 குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 SoC ஆல் இயக்கப்படுகிறது. இது 12 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி UFS 3.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
 • மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 25W சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,400mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
 • பின்புற கேமராவை பொறுத்தவரை, இது தனித்தனியே 12MP திறன் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

Samsung Galaxy Z Flip 3 விவரக்குறிப்புகள்

Samsung Galaxy Z Fold3 and Flip3's pre-bookings begin in India
 • விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி Z ஃப்ளிப் 3 இரண்டு டிஸ்பிளேக்களைக் கொண்டுள்ளது.
 • உட்புறத்தில், இது 6.7 இன்ச் மடிக்கக்கூடிய AMOLED டிஸ்பிளே உடன் 2640×1080 பிக்சல்கள் ரெசல்யூஷன், 120 Hz ஸ்கிரீன் refresh rate மற்றும் 1200 நிட்ஸ் உச்ச பிரகாசம் ஆகியவற்றை வழங்கும். 
 • வெளிப்புறத்தில், உங்களுக்கு 1.9 அங்குல சூப்பர் AMOLED திரை கிடைக்கும். இது 512×260 ரெசல்யூஷன் மற்றும் 935 நிட்ஸ் பிரகாசத்தை வழங்கும். 
 • இந்த சிறிய திரை தேதி மற்றும் நேரம் போன்ற விவரங்களைக் காட்டும்.
 • புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி Z ஃபிளிப் 3 ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் செயலி உடன் இயக்கப்படுகிறது, இதன் அதிகபட்ச வேகம் 2.84 GHz ஆகும். 
 • இந்த செயலி 8 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் ஸ்பேஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 
Samsung Galaxy Z Fold3 and Flip3's pre-bookings begin in India

 • இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான OneUI 3.0 இல் இயங்குகிறது. 
 • கேமராவைப் பொறுத்தவரை, கேலக்ஸி Z ஃப்ளிப் 3 12 MP வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 12 MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 
 • செல்ஃபிக்களை க்ளிக் செய்ய முன்பக்கத்தில் 10 MP கேமரா இருக்கும். 
 • பின்புற கேமரா அமைப்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் உடன் பாதுகாக்கப்படுகிறது மற்றும் இது 10x டிஜிட்டல் ஜூம், HDR10+ ரெக்கார்டிங் மற்றும் ஆட்டோ-ஃபோகஸ் டிராக்கிங் அம்சத்தை வழங்குகிறது.
 • இணைப்பிற்காக, கேலக்ஸி Z ஃப்ளிப் 3 வைஃபை 802.11, ப்ளூடூத் வி 5.1, யூஎஸ்பி டைப்-சி, என்எப்சி, ஜிபிஎஸ், கலிலியோ, GLONASS, Beidou மற்றும் 5ஜி தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது. 
 • இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ளது மற்றும் இது IPX8 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு பூச்சுடன் வருகிறது. 
 • ஆடியோவைப் பொறுத்தவரை, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மடிக்கக்கூடிய டிஸ்பிளே ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பத்துடன் சரவுண்ட் சவுண்ட் உள்ளது, இதில் டால்பி டிஜிட்டல், டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆகியவை அடங்கும்.
 • கேலக்ஸி Z ஃப்ளிப் 3 ஸ்மார்ட்போனில் 3,300 எம்ஏஎச் பேட்டரி 15W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம், 10W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் டெக்னாலஜி மற்றும் 4.5 ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் டெக்னாலஜி ஆதரவு உள்ளது.

Views: - 507

0

0