ஓலா ஸ்கூட்டருக்கு போட்டியாக களமிறங்கும் சிம்பிள் ஒன் ஸ்கூட்டரின் முன்பதிவு விவரங்கள் | Simple One | Simple Energy

Author: Hemalatha Ramkumar
13 August 2021, 1:19 pm
Simple One pre-booking to open on 15 August at Rs 1,947
Quick Share

சிம்பிள் எனர்ஜி நிறுவனம் அதன் வரவிருக்கும் சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை 2021 ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக உறுதி செய்துள்ளது. 

சிம்பிள் ஒன் ஸ்கூட்டரை வாங்குவதற்கு ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.1,947 தொகைக்கு முன்பதிவு செய்யலாம். 

முன்பதிவு செயல்முறை நிறுவனத்தின் இணையதளத்தில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று மாலை 5 மணிக்கு தொடங்கும். 

ஆகஸ்ட் 15 முதல் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள், தங்களது முன்பதிவை ரத்துச்செய்ய முடிவுச் செய்தால் பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் மற்றும் இந்த முன்பதிவு இந்தியா முழுவதும் கிடைக்கும். இந்த வாகனம் இந்தியாவில் முதல் கட்டமாக 13 மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்படும்.

முன்பதிவு பற்றிய விவரங்களை உறுதிப்படுத்தியதைத் தவிர, சிம்பிள் எனர்ஜி நிறுவனம் சிம்பிள் ஒன் ஸ்கூட்டருக்கு ஆற்றல் வழங்கும் மாற்றிக்கொள்ளக்கூடிய பேட்டரி பேக் பற்றிய சில விவரங்களையும் பகிர்ந்துள்ளது.

இந்த சிம்பிள் ஒன் ஸ்கூட்டரின் பேட்டரி பேக் ஆறு கிலோகிராம் எடைக்கொண்டதாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 

4.8kWh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி சுற்றுச்சூழலுக்கு இணக்கமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் 240 கிமீ பயண வரம்பை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. 

வரவிருக்கும் மின்சார ஸ்கூட்டர் மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது என்றும் மற்றும் 3.6 வினாடிகளில் 0-50 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளது. 

அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட அம்ச பட்டியலில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் அமைப்பு மற்றும் புளூடூத் இணைப்பு ஆகியவை அடங்கும். 

சிம்பிள் எனர்ஜி அதன் வரவிருக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ.1,10,000 முதல் ரூ.1,20,000 வரம்பிற்குள் விலை நிர்ணயம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 478

0

0