மனித மூளையைப் போல் செயல்படும் Sony நிறுவனத்தின் புதிய 65’’ 4K OLED TV! அடேங்கப்பா விலை இவ்ளோவா?!

19 June 2021, 9:14 am
Sony launches 65-inch 4K OLED TV at Rs. 3 lakh
Quick Share

BRAVIA XR TV பிரிவில் தயாரிப்புகளை விரிவுபடுத்த்தும் நோக்கில், சோனி இந்தியாவில் புதிய 65 அங்குல A80J OLED TV மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் விலை ரூ.2,99,990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிவியில் 4K ரெசல்யூஷன், சோனியின் Cognitive Processor XR எனும் அறிவாற்றல் செயலி XR, ஒரு பிரத்யேக விளையாட்டு முறை மற்றும் டால்பி விஷன் மற்றும் டால்பி ஆடியோ ஆதரவு ஆகியவை உள்ளன.

நிறுவனம் A80J OLED தொடரில் 55 அங்குல மற்றும் 77 அங்குல மாடலையும் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

சோனி பிராவியா A80J OLED டிவி (XR-65A80J) மெல்லிய உடலமைப்புடன் பக்கங்களில் மிக மெலிதான பெசல்களைக் கொண்டுள்ளது.

இது 4K (3840×2160 பிக்சல்கள்) ரெசல்யூஷன், டால்பி விஷன் மற்றும் HDR10 ஆதரவுடன் 65 அங்குல OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

DTS டிஜிட்டல் சரவுண்ட் சவுண்ட், டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி ஆடியோ ஆதரவுடன் 30W ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் இந்த டிவி கொண்டுள்ளது. இது ஒரே ஒரு டைட்டானியம் கருப்பு வண்ண விருப்பத்தில் கிடைக்கும்.

பிராவியா XR X90J தொடரைப் போலவே, XR A80J OLED டிவியும் சோனியின் அறிவாற்றல் செயலி XR சிப் உடன் இயக்கப்படுகிறது, இது நிகழ்நேரத்தில் உள்ள பொருட்களை குறுக்கு பகுப்பாய்வு செய்வதன் மூலமும் ஆடியோ மற்றும் படத் தரத்தை மேம்படுத்துவதன் மூலமும் மனித மூளையைப் போல செயல்படத் தூண்டப்படுகிறது.

பிரீமியம் டிவி XR கான்ட்ராஸ்ட், XR ட்ரைலுமினோஸ் புரோ, XR 4K அப்ஸ்கேலிங் மற்றும் XR மோஷன் கிளாரிட்டி போன்ற அம்சங்களையும் வழங்குகிறது.

சோனி பிராவியா XR A80J OLED TV ஆண்ட்ராய்டு டிவி OS உடன் இயங்குகிறது மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இயக்கப்படுகிறது.

Sony launches 65-inch 4K OLED TV at Rs. 3 lakh

இது அலெக்சா மற்றும் கூகிள் அசிஸ்டன்ட் ஆதரவைக் கொண்டுள்ளது, உள்ளமைக்கப்பட்ட Chromecast, கூகிள் பிளே ஸ்டோர், நெட்ஃபிலிக்ஸ் பயன்முறை, ஆப்பிள் ஏர்ப்ளே 2 மற்றும் ஆப்பிள் ஹோம் கிட் போன்றவற்றுக்கான ஆதரவையும் கொண்டுள்ளது.

இணைப்பிற்காக, இது நான்கு HDMI போர்ட்கள், மூன்று USB போர்ட்கள், ஒரு ஹெட்போன் ஜேக், ஈதர்நெட் போர்ட், டூயல்-பேன்ட் வைஃபை மற்றும் புளூடூத் 4.2 ஆகியவற்றைப் பெறுகிறது.

சோனி பிராவியா XR A80J OLED 65 இன்ச் டிவியின் விலை இந்தியாவில் 2,99,990 ரூபாய் ஆகும். இது சோனி சென்டர்ஸ், கூட்டாளர் மின்னணு கடைகள் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் வழியாக விற்பனை செய்யப்படுகிறது. 55 அங்குல மற்றும் 77 அங்குல மாடல்கள் தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 235

0

0