மருத்துவர்களை காக்க ஸ்பெயின் புதிய திட்டம்|கொரோனா பரிசோதனை செய்ய ரோபோக்கள் நியமனம்!!!

25 March 2020, 12:45 pm
Quick Share

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் முடிந்த வரையில் சந்தேகத்திற்குள்ளான எல்லா நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய முக்கிய கட்டத்தில் நாம் இன்று தள்ளப்பட்டு உள்ளோம். எல்லா நாடுகளும் அவர்களால் முடிந்த வரை மருத்துவத்துறையில் பணியாளர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இன்னும் சொல்லப் போனால் அவர்களை ஆபத்தான நிலையில் வேலை பார்க்க செய்து உள்ளனர் என்று தான் கூற வேண்டும்.

இந்த நிலையை மாற்றுவதற்கு ஸ்பெயின் நாடு ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது. புதிதாக கிடைத்துள்ள தகவலின்படி பரிசோதனை செய்வதற்கு  ரோபோட் படைகள் COVID-19 பரிசோதனை செய்ய நியமிக்க உள்ளது. விரைவாக பரிசோதனை செய்வதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதை விட முக்கிய காரணம் ஒன்று உள்ளது. 

கொரோனா பாதிக்கப்பட்டவர்களை கவனித்து கொள்ளும் மருத்துவர்கள் மற்றும் அத்துறை சார்ந்த பணியாளர்களுக்கு பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி கொண்டே போகிறது. இது குறித்து ஹெல்த் மினிஸ்டிரியில் (Health Ministry) கலந்தாய்வு நடைப்பெற்றது. 

ஸ்பெயினில் உள்ள மேட்ரிட்டை சார்ந்த ஹெல்த் இன்ஸ்டிடியூட் கார்லாஸ் III யின் தலைவரான ரேக்கல் யாட்டி கொரோனா பரிசோதனையை ஆட்டோமேட் செய்ய இருப்பதையும் இதற்கென இரண்டு ரோபோட்டுகள் நியமிக்கப்பட்டு ஒரு நாளைக்கு 80,000 பரிசோதனைகள் மேற்கொள்ள இருக்கும் செய்தியை வெளியிட்டார்.

அந்த ரோபோட்டுகள் எவ்வாறு இயங்குகிறது என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இது மாதிரி ஒரு திட்டம் அமல்படுத்தப்படுவது இது முதல் முறை அல்ல. பல நாடுகள் ஏற்கனவே ரோபோட்டுகளின் உதவியால் COVID-19 யை எதிர்த்து வருகிறது. 

உதாரணமாக சீனாவில் உள்ள வூகான் மருத்துவமனைகளில் ரோபோட் படைகள் நியமிக்கப்பட்டு அவை உடலின் வெப்பத்தை எடுக்க, உணவு பரிமாற மற்றும் அந்த இடத்தை சுத்தமாக வைக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தன. மேலும் கொரோனா பாதித்த நபர்களில் அறிகுறிகளை அறிய ஸ்த்தெதஸ்கோப் கொண்ட ரோபோக்கள் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

இது போல இந்தியாவிலும் கேரளாவில் சானிட்டைசர்களை வழங்கவும் கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் ரோபோக்களை நியமித்துள்ளது. கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள ரோபோக்கள் மருத்துவ துறைகளில் பயன்படுத்தப்படுவது புத்திசாலிதனமாக இருக்கும். இதனால் மருத்துவ துறையில் உள்ளவர்களின் வேலை பழு குறைக்கப்படுவதோடு அவர்களின் நலமும் காக்கப்படும்.

Leave a Reply