தமிழ் உட்பட 12 இந்திய மொழிகளுக்கு ஆதரவு | இந்திய மக்களுக்கு ஸ்பாடிஃபை புது வசதி!

Author: Dhivagar
12 March 2021, 2:51 pm
Spotify adds support for 12 Indian languages including Hindi, Gujarati, Bhojpuri, Kannada, Malayalam, others
Quick Share

கடந்த மாத தொடக்கத்தில் ஸ்ட்ரீம் ஆன் (Stream On) நிகழ்வில், ஸ்பாடிஃபை 36 புதிய மொழிகளைத் தனது தளத்தில் சேர்க்கப்போவதாக அறிவித்துள்ளது. மியூசிக் ஸ்ட்ரீமிங் தளம் இப்போது இந்தி, குஜராத்தி, போஜ்புரி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, பெங்காலி உள்ளிட்ட 12 இந்திய மொழிகளுக்கான ஆதரவை வழங்குகிறது. 

பயனர்கள் இப்போது பயன்பாட்டின் இயல்புநிலை மொழியாக இந்த 12  இந்திய மொழிகளில் தங்களுக்கு  ஏற்ற ஒன்றை வைத்துக்கொள்ளலாம். மேலும்  வெவ்வேறு நாட்டில் உள்ள மொழிகளுக்கான ஆதரவையும் வழங்கியுள்ளது.

இந்த மொழிகளைச் சேர்ப்பதன் மூலம், பயன்பாட்டில் இப்போது மொத்தம் 62 மொழிகளுக்கான ஆதரவு உள்ளது.

Spotify இன் அறிக்கையின்படி, “இந்தியாவில் உள்ள எங்கள் பயனர்களுக்கு சிறந்த ஆடியோ உள்ளடக்கத்தை கொண்டு வருவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதைச் செய்ய, எங்கள் பயனர்கள் பேசும் மொழிகளில் அவர்கள் எங்கிருந்தாலும் சரி, அவர்களின் அனுபவம் அவர்களின் மொழியிலேயே இருப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். இந்த கூடுதல் ஆதரவின் மூலம் எங்கள் பயனர்களுக்கு இன்னும் உள்ளூர்மயமாக்கப்பட்ட அனுபவத்தைத் வழங்க முடியும்” என்று தெரிவித்துள்ளது.

Views: - 205

0

0