JioPhone Next ஸ்மார்ட்போன்களின் வெளியீடு தாமதம் | இரவில் அறிவிப்பை வெளியிட்டது ரிலையன்ஸ் | காரணம் இதுதான்

Author: Dhivagar
10 September 2021, 9:06 am
Testing, chip shortage delays rollout of JioPhone Next
Quick Share

கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைந்து உருவாக்கி வரும் ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10 அன்று அதாவது இன்று அறிமுகம் செய்யப்பட இருந்த நிலையில், வெளியீடு தாமதமாகும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) தெரிவித்துள்ளது.

இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் வெளியீடு தீபாவளிக்கு முன்னதாக நிகழும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. தீபாவளி நவம்பர் மாதம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ மற்றும் கூகிள் நிறுவனங்கள் ஜியோபோன் நெக்ஸ்டை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்கு வழங்கி சோதிக்கத் தொடங்கியுள்ளன. இதன் மூலம் ஸ்மார்ட்போனை பயனருக்கு இணக்கமானதாக மேலும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளன. மேலும் தீபாவளி பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக மக்களின் கைகளுக்கு வந்து சேரவும் தீவிரமாக வேலைகள் நடந்து வருகின்றன. மேலும், இந்த கூடுதல் கால அவகாசம் தற்போது தொழில்துறையில் இருக்கும் குறைக்கடத்தி பற்றாக்குறையையும் தணிக்க உதவும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) தெரிவித்துள்ளது.

குறைக்கடத்திகள், பெரும்பாலான நுகர்வோர் மின்னணுவியலுக்கு ஆற்றல் அளிக்கும் முக்கிய கூறுகளாக உள்ளன. கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட வேலை நிறுத்தத்தின் காரணமாக இந்த ஆண்டு குறைக்கடத்திகள் பற்றாக்குறையாக ஏற்பட்டுள்ளது. இதனால், ஆட்டோமொபைல்கள் முதல் ஸ்மார்ட்போன்கள் முதல் வீடியோ கேம் கன்சோல்கள் வரை அனைத்து சாதனங்களின் உருவாக்க பணிகளும் பாதிக்கபட்டுள்ளன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் ஜூன் 24 அன்று இந்த தொலைபேசி செப்டம்பர் 10, விநாயகர் சதுர்த்தி தினத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறினார்.

ஜியோபோன் நெக்ஸ்ட் என்பது ஆண்ட்ராய்டு மற்றும் பிளே ஸ்டோரை அடிப்படையாகக் கொண்ட உகந்த இயக்க முறைமையைக் கொண்ட ஒரு ஸ்மார்ட்போன் ஆகும். இந்த சாதனம் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரீமியம் அம்சங்களை வழங்கும், இது மிகவும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களுடன் தொடர்புடையது. இதில் வாய்ஸ்-ஃபர்ஸ்ட் அம்சமும் உள்ளது. இதன் உதவியுடன் போனில் உள்ள உள்ளடக்கங்களை தங்கள் சொந்த மொழியில் கேட்க முடியும். மேலும், சிறந்த கேமரா அனுபவத்தை பெறவும், மற்றும் சமீபத்திய ஆண்ட்ராய்டு அம்சம் மற்றும் பாதுகாப்பு மேம்படுத்தல்களைப் பெறவும் இது மிகவும் உதவியாக இருக்கும்.

Views: - 533

0

0