டைமக்ஸ் பேஷன் ஃபிட்னஸ் பேண்ட் இந்தியாவில் அறிமுகம் | விலை & அம்சங்கள் இங்கே

10 November 2020, 2:44 pm
Timex launches its first fashion fitness band in India for Rs 4,495
Quick Share

டைமக்ஸ் குரூப் இந்தியா லிமிடெட் தனது சமீபத்திய பிட்னஸ் பேண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதாக இன்று அறிவித்துள்ளது. டைமக்ஸ் பிட்னஸ் பேண்ட் ஒரு அலாய் உறை, ஒரு ஸ்டீல் மெஷ் பேண்ட் மற்றும் சிலிக்கான் ஸ்ட்ராப் உடன் வருகிறது.

ரூ.4,495 விலையில், இந்த ஃபிட்னெஸ் பேண்டுகள் இப்போது நிறுவனத்தின் வலைத்தளம் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட டைமக்ஸ் சில்லறை விற்பனையாளர்கள் கூட்டாளர்களிடமிருந்து கிடைக்கின்றன. இது ரோஸ் கோல்ட் மற்றும் பிளாக் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மெஷ் பேண்ட் ஆகிய இரண்டு வண்ண வகைகளிலும் மற்றும் கருப்பு சிலிகான் ஸ்ட்ராப் உடனும் வருகிறது.

ஃபிட்னஸ் பேண்ட் 0.96 இன்ச், 160 * 80 வண்ண முழு டச் டிஸ்ப்ளே போன்ற சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்வாட்சில் 5 நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி உள்ளது, இது உங்கள் நாளின் கட்டுப்பாட்டை கைகளிலேயே வைத்துக்கொள்ள உதவும். செயல்பாட்டு கண்காணிப்பு, இசை கட்டுப்பாடு, இதய துடிப்பு கண்காணிப்பு மற்றும் அறிவிப்பு எச்சரிக்கை ஆகியவை பிற அம்சங்களில் அடங்கும்.

Views: - 42

0

0