மடிக்கணினி வணிகத்திலிருந்து வெளியேறியது தோஷிபா! மொத்த பங்குகளையும் ஒரு பிரபல நிறுவனத்துக்கு விற்றது! காரணம் என்ன?
7 August 2020, 6:38 pmஇன்றைய செய்திகளிலேயே ஆச்சரியமான அறிவிப்பு என்றால், தோஷிபா மடிக்கணினி வணிகத்திலிருந்து வெளியேறுவது தான். தோஷிபா நிறுவனமே இந்த தகவலை உறுபடுத்தியுள்ளது.
1985 ஆம் ஆண்டில் (35 ஆண்டுகளுக்கு முன்பு) மடிக்கணினிகளைத் தயாரிக்கத் தொடங்கிய நிறுவனம், ஆசஸ், டெல், ஆப்பிள், லெனோவா மற்றும் ஹெச்பி போன்ற பிராண்டுகள் மடிக்கணினி துறைக்கு வரும் வரை மடிக்கணினி சந்தையை ஆட்சி செய்தது இந்த தோஷிபா நிறுவனம் தான்.
இந்நிறுவனம் தான் அதிகப்படியான பயன்பாட்டை நோக்கமாகக் கொண்டு ‘சேட்டிலைட்’ மடிக்கணினிகளை உருவாக்கியதற்காக அறியப்பட்டது.
மெல்லிய மற்றும் இலகுரக மடிக்கணினிகளின் ‘போர்டேஜ்’ (Portege) வரம்பும் இருந்தது. இந்த இரண்டு தொடர்களாலும், தோஷிபா 1990 களில் முக்கிய சந்தைப் பங்கைப் பெற முடிந்தது.
ஹெச்பி, டெல் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் மெல்லிய, இலகுரக மற்றும் சக்திவாய்ந்த மடிக்கணினிகளின் ஆதிக்கத்தால், PC சந்தையுடன், தோஷிபாவால் ஒரு தனி அடையாளத்தை உருவாக்க முடியவில்லை மற்றும் இறுதியாக பயனர்கள் விரும்பியதையும் பூர்த்தி செய்ய முடியவில்லை.
இது ஆண்டுகள் ஆக ஆக குறைந்த விருப்பம் கொண்ட பிராண்டாக மாறியது. இதன் விளைவாக நிறுவனம் தனது பிசி வணிக பிரிவை ஷார்ப் நிறுவனத்திற்கு சுமார் $36 மில்லியனுக்கு விற்றது.
இருப்பினும், இது 19.9% பங்கைத் தக்க வைத்துக் கொண்டது. ஷார்ப் பின்னர் வணிகத்தை டைனாபுக் (Dynabook) என மறுபெயரிட்டு புதிய தயாரிப்புகளுடன் பிராண்டை மீண்டும் தொடங்கி உள்ளது.
இருப்பினும், ஜூன் 30 அன்று, டைனாபுக்கிற்காக மீதமுள்ள 19.9% பங்கையும் ஷார்ப் வாங்கியது மற்றும் தோஷிபா அந்த பங்குகளையும் விற்றது.
நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் ஒரு புதிய அளவிலான வீட்டு உபகரணங்களை அறிமுகப்படுத்தியது. அந்தப் பட்டியலில் குளிர்சாதன பெட்டிகள், சலவை இயந்திரங்கள், வாஷர் டிரையர்ஸ் மற்றும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இடம்பெற்று உள்ளன.
பட்டியலில் முதன்மையானது தோஷிபா மல்டி-டோர் குளிர்சாதன பெட்டி GR-RF646WE-PGI ஆகும், இதன் விலை ரூ.149,990 ஆகும். ரூ.21,000 முதல் ரூ.80,000 வரை ஆறு ஃபிரண்ட் லோடிங் சலவை இயந்திரங்கள் உள்ளன. தோஷிபா 11 கிலோ ஃபிரண்ட் லோடிங் வாஷர்-ட்ரையரை ரூ.79,990 விலையில் அறிமுகப்படுத்தியது.