டெலிகாம் ஆபரேட்டர்களுக்கு ரூ.35 கோடி அபராதம்! TRAI அதிரடி

25 November 2020, 2:17 pm
TRAI Imposes Rs. 35 Crore Penalty On Telecom Operators
Quick Share

முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு TRAI ரூ.35 கோடி அபராதம் விதித்துள்ளது. எதற்காக இந்த அபராதம்? திடீர் காரணம் என்ன? விவரங்களைப் பார்க்கலாம் வாங்க. 

தொலைத்தொடர்பு சீரமைப்பாளரான TRAI, இந்தியாவில் டிஜிட்டல் கட்டண மோசடிகள் அதிகரிக்க காரணமாக இருந்து வரும் சைபர் கிரைமினல்களை வாடிக்கையாளர்களுக்கு செய்திகளை அனுப்ப அனுமதித்ததற்காக வோடபோன்-ஐடியா, ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட ஆபரேட்டர்களுக்கு ரூ.35 கோடி அபராதம் விதித்துள்ளது.

இருப்பினும், அதிகபட்ச அபராதமாக ரூ.30.1 கோடி பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) மீது விதிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மற்ற நிறுவனங்களில் டாடா டெலிசர்வீசஸ், வீடியோகான், குவாட்ரண்ட் டெலிசர்வீசஸ் மற்றும் மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் ஆகியவையும்  உள்ளன.

தெரியாதவர்களுக்கு, அனைத்து நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு விளம்பர செய்திகளை அனுப்புகின்றன; இருப்பினும், அவர்கள் முழு உள்ளடக்கத்தையும் தொலைத் தொடர்பு நிறுவனங்களால் இயக்கப்படும் பிளாக்செயின் அடிப்படையிலான தளங்களில் பதிவு செய்ய வேண்டும். 

அது போன்று பதிவு செய்யப்படும்போது மோசடி எஸ்எம்எஸ் உள்ளிட்ட அனைத்து ஸ்பேம் செய்திகளையும் இந்த தளம் தடுக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், Vi, பிஎஸ்என்எல் மற்றும் அபராதம் விதிக்கப்பட்ட பல நிறுவனங்களும்  இந்த செய்திகளைத் தடுப்பதில் அல்லது கண்காணிப்பதில் தீவிரம் காட்டவில்லை. இந்த காரணத்தினால்தான் மேற்சொன்ன தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது TRAI அபராதம் விதித்துள்ளது.