டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கின் விலைகள் திடீர் உயர்வு | புதிய விலை எவ்ளோ தெரியுமா?

7 May 2021, 8:52 am
TVS Apache RTR 160 4V prices hiked
Quick Share

டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அப்பாச்சி RTR 160 4V பைக்கின் விலைகளை உயர்த்தியுள்ளது.

அப்பாச்சி RTR 160 4V பைக் டிரம் மற்றும் டிஸ்க் ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இவை இரண்டும் ரூ.1,250 விலை உயர்வு பெற்றுள்ளன. இப்போது, இந்த பைக் மாடல்களின் எக்ஸ்ஷோரூம் விலைகள் தலா ரூ.1,08,565 மற்றும் ரூ.1,11,615 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதம் விலை உயர்ந்ததை அடுத்து அப்பாச்சி RTR 160 4V பைக்கின் விலை இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. கடந்தமுறை இரண்டு பதிப்புகளுக்கும் விலை 45 ரூபாய் அதிகரிக்கப்பட்டது.

விலை உயர்வு இருந்த போதிலும், டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V மாறாமல் அப்படியே உள்ளது. அதன் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் மாறாமல் அப்படியே உள்ளது. 

இந்த மோட்டார் சைக்கிள் 160 சிசி இன்ஜின் உடன் இயக்கப்படுகிறது, இது சமீபத்தில் அதிக சக்தி மற்றும் முறுக்குவிசை தயாரிக்க டியூன் செய்யப்பட்டது. புதிய மாடல் 17.4 bhp ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. திருப்புவிசை உற்பத்தியும் 14.12Nm இலிருந்து 14.73Nm ஆக உயர்ந்துள்ளது. டி.வி.எஸ் நிறுவனம் இந்த பைக்கின் எடையை 2 கிலோ குறைத்து இப்போது 145 கிலோவாக கொண்டுள்ளது.

இந்த விலை உயர்வுடன், அப்பாச்சி RTR 160 4V அதன் மிகப்பெரிய போட்டியாளரான ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R ஐ விட சற்று அதிக விலை கொண்டது. ஹீரோவைத் தவிர, இந்த அப்பாச்சி பைக் இந்தியாவில் ஹோண்டா X-பிளேடுடனும் போட்டியிடுகிறது.

Views: - 271

0

0