டி.வி.எஸ்-க்குச் சொந்தமான நார்டன் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை திறப்பு

22 April 2021, 5:47 pm
TVS-owned Norton motorcycles opens new factory in Solihull
Quick Share

டி.வி.எஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சோலிஹல் (Solihull) எனும் பகுதியில் ஒரு புதிய தொழிற்சாலையைத் திறந்துள்ளது. இந்த தொழிற்சாலை பர்மிங்காமின் புறநகரில் அமைந்துள்ளது.

நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி ஜான் ரஸ்ஸல், முந்தைய டோனிங்டன் தொழிற்சாலை சுகாதார விதிகளை பின்பற்றாததால் இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

புதிய தொழிற்சாலை 75,347 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது, இது தேவைக்கேற்ப மேலும் விரிவாக்கப்படலாம். இது மேலும் நவீன உற்பத்தி கருவிகளையும் கொண்டுள்ளது, இதன் உதவியுடன் நிறுவனம் சமீபத்திய பைக் தொடர்களான கமாண்டோஸ் மற்றும் V4-SS ஆகியவற்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. புதிய தொழிற்சாலை ஆண்டுக்கு 8000 மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்வதை இலக்காக கொண்டுள்ளது.

டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2020 இல் பிரிட்டிஷ் மோட்டார் சைக்கிள் பிராண்டான நார்டனை GBP 16 மில்லியன் தொகைக்கு கையகப்படுத்தியது. இப்போது உலகளாவில் அதன் விநியோகச் சங்கிலியை விரிவுபடுத்தி மீண்டும் செயல்பாட்டுக்கு வர பிராண்டிற்கு உதவுகிறது.

Views: - 1265

0

0