லிட்டருக்கு 110.12 கிமீ செல்லும் பைக்! ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்தது இந்த டி.வி.எஸ் பைக்!

24 September 2020, 8:28 pm
TVS Sport BS6 Registers Highest Fuel-Efficiency Enters Asia Book Of Records
Quick Share

டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம், தங்கள் 110 சிசி பைக் ஆன ‘ஸ்போர்ட்’ லிட்டருக்கு 110.12 கிலோமீட்டர் பயணித்து அதிகபட்ச சாலை எரிபொருள் திறனை வழங்கும் சிறந்த பைக் என்ற புதிய சாதனையை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

டி.வி.எஸ் ஸ்போர்ட் பயணிகள் பைக் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் நுழைய லிட்டருக்கு 110.12 கி.மீ. பயணித்து சாதனைப் படைத்துள்ளது. 2019 ஆண்டில் பிஎஸ் 4 இணக்கமான மாடல் லிட்டருக்கு 76.40 கிமீ எட்டி படைத்திருந்த சாதனையை பிஎஸ் 6-இணக்கமான 110 சிசி ஸ்போர்ட் மோட்டார் சைக்கிள் லிட்டருக்கு 110.12 கிமீ பயணித்து முறியடித்துள்ளது.

TVS Sport BS6 Registers Highest Fuel-Efficiency Enters Asia Book Of Records

யுனைடெட் இந்தியா ரைடு சீரிஸின் ஒரு பகுதியாக 2020 ஆகஸ்ட் 8 முதல் 13 வரை மோட்டார் சைக்கிளில் பயணித்த பவித்ரா பட்ரோ என்பவரால் இந்த சாதனை படைக்கப்பட்டது. பட்ரோ டி.வி.எஸ் ஸ்போர்ட் பைக்குடன் மொத்தமாக  1021.90 கி.மீ தூரம் சவாரி செய்தார். இவ்வளவு பயணித்த இவருக்கு வெறும் 9.28 லிட்டர் எரிபொருள் மட்டுமே தேவைப்பட்டது.

TVS Sport BS6 Registers Highest Fuel-Efficiency Enters Asia Book Of Records

டி.வி.எஸ் ஸ்போர்ட் பைக், தான் 2019 ஆண்டில் செய்த சாதனையை 2020 ஆண்டில்  தானே முறியடித்துள்ளது. டிவிஎஸ் ஸ்போர்ட்டின் பழைய பிஎஸ் 4 100 சிசி பதிப்பு கடந்த ஆண்டும் இந்தியா மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் ‘Highest fuel-efficiency delivered by a motorcycle on the Golden Quadrilateral அதாவது ஒரு மோட்டார் சைக்கிள் வழங்கிய அதிகபட்ச எரிபொருள் திறன்’ என்ற பிரிவில் சாதனைப் படைத்தது.

TVS Sport BS6 Registers Highest Fuel-Efficiency Enters Asia Book Of Records

பிஎஸ் 6 இணக்கமான டிவிஎஸ் ஸ்போர்ட் மோட்டார் சைக்கிள் 110 சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு இன்ஜின் உடன் இயக்கப்படுகிறது. இது 7350rpm இல் 8.2bhp மற்றும் 4500rpm இல் 8.7Nm திருப்புவிசையை உற்பத்தி செய்கிறது, இது நான்கு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

டி.வி.எஸ் ஸ்போர்ட் பைக் இரண்டாவது முறையாக இந்திய சந்தையில் ஒரு அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் மோட்டார் சைக்கிள் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் ஹீரோ ஸ்ப்ளெண்டர், ஹோண்டா CT 110 ட்ரீம் மற்றும் ஒரு சில பைக்குகளுடன் போட்டியிடுகிறது.

Views: - 13

0

0