அம்பானியை எதிர்க்கிறாரா ரவீந்தர் தக்கர்! 2ஜி இல்லா இந்தியா சாத்தியமில்லையா?

10 August 2020, 8:29 pm
Vodafone Idea MD Ravinder Takkar rejects Mukesh Ambani's call for ‘2G Mukt’ India
Quick Share

RIL தலைவர் முகேஷ் அம்பானியின் “2 ஜி இல்லா இந்தியா” மாற்றத்திற்கான அழைப்பை வோடபோன் ஐடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்.டி ரவீந்தர் தக்கர் நிராகரித்துள்ளார்.

ஸ்மார்ட்போன்கள் உடனடியாக தேவைப்படாத வாடிக்கையாளர்களுக்கு 2ஜி என்பது ஒரு அவசியமான மற்றும் நல்ல சேவை விருப்பமாக இருப்பதால் 2ஜி யை முற்றிலுமாக செயலிழக்கச்  செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.

எகனாமிக் டைம்ஸின் அறிக்கையின்படி, 2ஜி என்பது வாடிக்கையாளர்களில் ஒரு குழுவிற்கு, குறிப்பாக வயதானவர்களுக்கு, குறைந்த பட்ச சேவை விருப்பமாகும், ஸ்மார்ட்போன் அல்லாத தொலைபேசிகளிலும் மற்றும் ஸ்மார்ட்போன்கள் தேவை இல்லாத மக்களுக்கும் 2ஜி சேவை மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது.

RIL தலைவர் முகேஷ் அம்பானியின் பெயரைக் குறிப்பிடாமல், 2 ஜி சேவைகள் நிறுத்தப்பட வேண்டும் (இந்தியாவில்) என்பது முற்றிலும் தவறான கருத்து என்றும் அவர் கூறியுள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 2ஜி இல்லா இந்தியாவிற்கான அவசர கொள்கை நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்த பதினைந்து நாட்களுக்குள் பின்னர் ரவீந்தர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அம்பானியின் அழைப்புக்கு மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆதரவளிக்குமா இல்லை வோடபோன் ஐடியா போல் எதிர்ப்பு தெரிவிக்குமா என்பதை எல்லாம் வருங்காலங்களில் தான் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: KTM தயாரித்து வரும் மின்சார ஸ்கூட்டர் இப்படித்தான் இருக்கப்போகிறதா? வெளியானது புதிய தகவல்(Opens in a new browser tab)

Views: - 0

0

0

1 thought on “அம்பானியை எதிர்க்கிறாரா ரவீந்தர் தக்கர்! 2ஜி இல்லா இந்தியா சாத்தியமில்லையா?

Comments are closed.