ஒரே கல்லில் ரெண்டு பழம்! வோடாபோன்-ஐடியாவின் அசத்தலான ரூ.449 திட்டம் பற்றி தெரிஞ்சா.. உடனே ரீசார்ஜ் பண்ணிடுவிங்க!

Author: Hemalatha Ramkumar
11 August 2021, 9:50 am
Vodafone Idea Rs 449 prepaid plan offers double data benefit
Quick Share

Vi (வோடபோன் ஐடியா) நிறுவனம் ரூ.449 விலையிலான ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனம் இப்போது டபுள் டேட்டா நன்மை உடன் மற்றும் ஜீ5 சந்தாவையும் வழங்குகிறது. இதனால் இந்த திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒரே கல்லில் இரண்டு பழம் கிடைக்க உள்ளது. 

வோடபோன் ஐடியா ரூ.449 நன்மைகள்

ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் இப்போது டபுள் டேட்டா நன்மையுடன் 4 ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது. முன்னதாக இந்த திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்கி வந்தது. ஆனால் 2 + 2 ஜிபி என மொத்தம் 4 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. கூடுதலாக, Vi ப்ரீபெய்ட் திட்டம் இப்போது ஜீ5 பிரீமியம் சந்தாவையும் இந்த திட்டத்துடன் இலவசமாக வருகிறது. 

மேலும், இரவு நேர இலவச டேட்டா (காலை 12 மணி முதல் காலை 6 மணி வரை), வார இறுதி டேட்டா ரோல்ஓவர் மற்றும் Vi மூவிஸ் & டிவி ஆப் சந்தாவும் இதனுடன் கிடைக்கும். வார இறுதி டேட்டா ரோல்ஓவர் வசதியுடன் சந்தாதாரர்கள் முந்தைய வாரத்தில் பயன்படுத்தாமால் மீதமுள்ள தரவை இந்த வாரத்தில் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கும்.

Vi இன் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும். மேலே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நன்மைகளுடன், திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் உண்மையிலேயே வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது. மேலும், இந்த பேக் உடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கின்றது. இந்த திட்டத்தின் 56 நாட்கள் கால அளவில் மொத்தம் 224 ஜிபி டேட்டா கிடைக்கும்.

இந்த 449 திட்டம் தவிர, நிறுவனம் ரூ.699 மற்றும் ரூ.299 திட்டங்களிலும் ஒரு வருடத்திற்கு ZEE5 பிரீமியம் அணுகலை வழங்குகிறது.

அதே போல,  வோடபோன் ஐடியாவின் ரூ.199 ரீசார்ஜ் திட்டமும் மேலும் தரவு நன்மைகளை வழங்கும் வகையில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தப்பட்ட ரூ.199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் இப்போது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா நன்மைகளுடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் இப்போது 28 நாட்கள் ஆகும். நினைவுகூர, வோடபோன் ஐடியா முன்பு 1 ஜிபி தினசரி டேட்டாவை மட்டுமே 24 நாட்களுக்கு வழங்கி வந்தது.

இது தவிர, இந்த திட்டம் தொடர்ந்து அதே வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் Vi மூவிஸ் & டிவி பயன்பாட்டிற்கான அணுகல் போன்ற கூடுதல் நன்மைகளையும் வழங்கும்.

Views: - 343

0

0