20 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் திடீர் முடக்கம் | என்ன காரணம் தெரியுமா? நீங்க சிக்கிடாதீங்க!

16 July 2021, 5:28 pm
WhatsApp says banned 2 million accounts which abused bulk, automated messaging feature
Quick Share

உலகளாவிய உடனடி செய்தியிடல் பயன்பாடான வாட்ஸ்அப் வியாழக்கிழமை புதிய இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைக் குறியீட்டைப் பின்பற்றி தனது முதல் மாத அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி 2021 மே 15 முதல் ஜூன் 15 வரையிலான காலப்பகுதிக்கான அறிக்கை இது. 

இந்த 30 நாள் காலகட்டத்தில், வாட்ஸ்அப் மொத்தம் 2 மில்லியன் அதாவது 20 லட்சம் இந்தியா கணக்குகளை தடைசெய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது, அதே நேரத்தில் இந்த காலகட்டத்தில் மொத்தம் 345 புகார்கள் கிடைத்ததாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

+91 என்ற எண்ணுடன் தொடங்கும் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாட்ஸ்அப் கணக்கும் இந்திய கணக்காக கருதப்படுகிறது. தடைசெய்யப்பட்ட 2 மில்லியன் இந்திய கணக்குகளும் விதிமீறி செயல்பட்டதாகவும், எதிர்மறை புகார்கள் அந்த எண்களின் மீது அளிக்கப்பட்டதாகவும், தடைசெய்யப்பட்ட இத்தகைய கணக்குகளில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை தானியங்கி அல்லது bulk SMS களை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்தியுள்ளன என்றும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

எனவே தேவையற்ற விளம்பர மெசேஜ்களை மொத்தமாக யாருக்கும் அனுப்பக்கூடாது. அதே போல உங்கள் வாட்ஸ்அப் எண்ணைப் பயன்படுத்தி விதிமீறல் செயல்முறைகள் ஏதும் கண்டறியப்பட்டால் உங்கள் கணக்குகளும் நீக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Views: - 280

0

0

Leave a Reply