வாட்ஸ்அப் மோசடி: இலவசமாக கிடைக்குமா ஜியோ ரூ.555 திட்டம்? ஏமாறாம எச்சரிக்கையாக இருங்க மக்களே!

Author: Dhivagar
31 March 2021, 12:13 pm
WhatsApp Scam Check all details of this FAKE plan here
Quick Share

மிகவும் பிரபலமான உடனடி செய்தியிடல் தளமான வாட்ஸ்அப் இப்போது மோசடி செய்பவர்களுக்கான ஒரு இடமாகவும் மாறியுள்ளது. இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ்அப் சேவையைப் பயன்படுத்துகின்றனர். 

இது சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் வசதியான செய்தியிடல் பயன்பாடாக இருந்தாலும், எப்படியோ பல மோசடிகளுக்கான இடமாகவும் மாறிவிடுகிறது. இப்போது ஒரு புதிய வகை மோசடி வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. 

அது யாதெனில், ரூ.555 மதிப்பிலான ஜியோ திட்டம் இலவசமாக கிடைப்பதாக ஒரு செய்தி வலம் வருகிறத. ஆனால், இது ஒரு போலியான சலுகை என்பதால் வாட்ஸ்அப் பயனர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இதை பார்த்த உடனேயே ஏமாந்துவிடக்கூடாது.

BGR இந்தியாவின் அறிக்கையின்படி, புதிய வாட்ஸ்அப் செய்தி ஜியோ பயனர்களுக்கு ரூ.555 திட்டத்தை இலவசமாக வழங்குவதாகக் கூறுகிறது. இருப்பினும், இது உண்மை இல்லை. சலுகையைப் பெறுவதற்கான இணைப்பைக் கொண்ட செய்தி போலியானது. அந்த இணைப்பை நீங்கள் கிளிக் செய்யும்போது, ஒரு தீங்கிழைக்கும் வலைத்தளத்திற்கு நீங்கள் போக நேரிடும், இது உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருட ஹேக்கர்களுக்கு அனுமதி வழங்கும்.

இதையடுத்து, இமாச்சல பிரதேசத்தின் சைபர் கிரைம் பிரிவும் இது போலியான தகவல் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து இது போலியான தகவல் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

ஒரு ஃபிஷிங் வலைத்தளம் ஆக https://jioozone.blogspot.com என்பது உருவாக்கப்பட்டுள்ளது. வலைத்தளங்கள் ரூ.555 மதிப்புள்ள இலவச ஜியோ ரீசார்ஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. அதை நம்பி போலியான மெசேஜுக்கு மயங்கினால், அங்கு தகவல் திருடப்படும் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

Views: - 98

0

0