பிக்சர்-இன்-பிக்சர் பயன்முறையில் ஷேர்சேட் வீடியோக்களை ஒருங்கிணைக்க வாட்ஸ்அப் திட்டம் | முழு விவரம் அறிக

7 August 2020, 5:21 pm
WhatsApp To Integrate ShareChat Videos In Picture-In-Picture Mode
Quick Share

டிக்டாக் மீதான தடையைத் தொடர்ந்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய மாற்று பயன்பாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காண்கிறோம். புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பலவற்றைக் கண்டறிய பயனர்களை அனுமதிக்கும் புதிய பயன்பாடுகளில் ஷேர்சேட் செயலியும் ஒன்றாகும். இது டிக்டாக்கிற்கு மிகவும் ஒத்ததாகும். செய்தியிடல் தலமான வாட்ஸ்அப் ஷேர்சேட்டை ஒருங்கிணைப்பதில் இப்போது செயல்பட்டு வருகிறது.

ஷேர்சேட் வீடியோக்களை ஒருங்கிணைக்கும் வாட்ஸ்அப் பீட்டா

வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் இந்த புதிய அம்சத்தைக் கண்ட WABetaInfo இரண்டு ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்து இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளது. அதன் தோற்றத்திலிருந்தே நமக்கு தெரிவது யாதெனில், ஷேர்சேட் வீடியோக்களுக்கு ஒரு பிரத்யேக பிளேயரைக் கொண்டிருப்பதில் வாட்ஸ்அப் செயல்படுகிறது. இது போன்ற ஒன்றை நாம் ஏற்கனவே யூடியூப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வீடியோக்களுக்கு பார்த்திருக்கிறோம்.

இதன் பொருள் ஷேர்சேட் வீடியோக்கள் மற்றும் படங்களுக்கான வாட்ஸ்அப் ஒரு பிக்சர்-இன்-பிக்சர் (PiP) பயன்முறையைக் கொண்டிருக்கும். PiP பயன்முறை தனிப்பட்ட அரட்டை மற்றும் குரூப்களில் பாப்-அப் செய்யப்படும் தனி ஒரு சாளரத்தில் வீடியோக்களை இயக்க அனுமதிக்கிறது. பயனர் வாட்ஸ்அப்பின் பிரதான பக்கத்திற்கு திரும்பும்போது கூட தொடர்ந்து இயங்குவதற்கு PiP பயன்முறை வீடியோவை ஆதரிக்கிறது.

உதாரணமாக, ஒரு பயனர் ஷேர்சேட்டில் இருந்து ஒரு வீடியோவை வாட்ஸ்அப்பில் பகிர்ந்தால், ரிசீவர் இந்த வீடியோவை வாட்ஸ்அப்பிற்குள் தனித்தனியாக ஷேர்சேட்டைத் திறக்காமல் பார்க்கலாம். ஆண்ட்ராய்டு மற்றும் iOS க்காக வாட்ஸ்அப்பில் ஷேர்சேட் ஒருங்கிணைப்பு வளர்ச்சியில் உள்ளது என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது. ஆர்வமுள்ள பயனர்கள் iOS 2.20.81.3 க்கான வாட்ஸ்அப் பீட்டாவையும், Android 2.20.197.7 க்கான வாட்ஸ்அப் பீட்டாவையும் நிறுவுவதன் மூலம் பீட்டா பயன்பாட்டில் அம்சத்தை முயற்சி செய்யலாம்.

கூடுதல் ஆதரவைப் பெறுகிறது ஷேர்சேட் செயலி

வீடியோக்களையும் படங்களையும் கண்டுபிடிப்பதற்கான சிறந்த தளங்களில் ஒன்றாக ஷேர்சேட் உருவாகி வருகிறது. இந்திய சமூக ஊடக தளமாக பிரபலப்படுத்தப்பட்ட ஷேர்சேட் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நிறுவனங்களிடமிருந்தும் முதலீடுகளை ஈர்த்து வருகிறது.

பேஸ்புக்கிற்குச் சொந்தமான மெசேஜிங் பயன்பாட்டிலிருந்து ஆதரவைப் பெறுவது என்பது பரந்த அளவிலான அங்கீகாரத்தைக் குறிக்கிறது, இது அதன் பிரபலத்தை இன்னும் அதிகமாக்கக்கூடும். கவனிக்க வேண்டியது என்னவென்றால், டிக்டாக்கிற்கு கூட வாட்ஸ்அப்பிலிருந்து இந்த வகையான ஆதரவு இல்லை! அதே நேரத்தில், வாட்ஸ்அப் இந்த அம்சத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஷேர்சேட் வீடியோ ஒருங்கிணைப்பு நிலையான புதுப்பிப்பில் செய்ல்படலாம் அல்லது செய்ல்படாமலும் போகலாம். அது இறுதியாக நிறைவேறுமா இல்லையா என்பதை எல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Views: - 81

0

0

2 thoughts on “பிக்சர்-இன்-பிக்சர் பயன்முறையில் ஷேர்சேட் வீடியோக்களை ஒருங்கிணைக்க வாட்ஸ்அப் திட்டம் | முழு விவரம் அறிக

Comments are closed.