எல்லை பிரச்சினை காரணம் இல்லையாம்… 59 சீன செயலிகள் நீக்கத்திற்கு இதுவே காரணம்

30 June 2020, 8:11 am
Why TikTok and other 58 Chinese apps were banned from Android, iPhones
Quick Share

நீங்கள் நேற்று இரவு சமூக ஊடகச் செய்திகளைப் பார்த்திருந்தாலே தெரிந்திருக்கும், நேற்றைய பேசுபொருள் என்னவென்று. ஆம், கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றிலிருந்து 59 சீன செயலிகளை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளது, இது கண்டிப்பாக உங்களுக்கு தெரிந்திருக்கக்கூடும்.

இந்த பட்டியலில் UC பிரௌசர், டிக்டாக், கேம்ஸ்கேனர் போன்ற சில முக்கிய செயலிகள் மட்டுமல்லாமல், விளையாட்டுகள், உற்பத்தித்திறன், ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் பலவற்றில் உள்ள செயலிகளும் உள்ளதுதான் இங்கே இது பெரிய அளவில் பேசுபொருளாக மாறக் காரணம். மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் வெளியீடு கண்டிப்பாக குறிப்பிடுவது போல, இவை எதிர்காலத்தில் இனிமேல் எப்போதும் பயன்படுத்தப்படாது. பிரபலமான செயலிகளுடன் மற்ற அனைத்து 59 செயலிகளின் முழு தொகுப்பையும் நாங்கள் ஏற்கனவே பட்டியலிட்டுள்ளோம், நீங்கள் அதைச் இங்கும் பார்க்கலாம்.

இந்தியா-சீனா எல்லை பிரச்சினை காரணம் அல்ல

சுவாரஸ்யமாக,  அரசாங்கம் வெளியிட்ட செய்திகுறிப்பில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆனது இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினையை இந்த செயலிகளை தடை செய்வதற்கான காரணமாகக் கூறவில்லை. அதற்கு ‘தனியுரிமை’ மற்றும் பயனர்களின் தரவு பாதுகாப்பு குறித்த கவலைகளே காரணம் என்று அறிவித்துள்ளது.

சீர்குலைக்கும் செயல்கள்

இந்திய அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்த 59 செயலிகளும் “இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மாநிலங்களின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளன.” டிக்டாக், UC பிரௌசர், ஷேரிட், வீசேட், க்ளாஷ் ஆஃப் கிங்ஸ் போன்ற பயன்பாடுகள் 130 கோடி இந்தியர்களின் தரவுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அரசாங்கம் கருதுகிறது.

திடீர் முடிவு அல்ல

இது ஒரு திடீர் முடிவு அல்ல என்பதைக் குறிக்கும் அரசாங்கம், ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில் கிடைக்கக்கூடிய சில மொபைல் செயலிகளை தவறாகப் பயன்படுத்துவது பற்றிய பல அறிக்கைகள்,  பயனர்களின் தரவை அங்கீகரிக்கப்படாத முறையில் சேவையகங்களுக்கு திருடி மறைத்து அனுப்பியது உட்பட பல்வேறு ஆதாரங்களில் இருந்து பல புகார்களைப் பெற்றுள்ளது.

இது இந்தியாவுக்கு வெளியே இருப்பிடங்களைக் கொண்டுள்ளது. இது பயனர் தரவு மற்றும் தனியுரிமை பற்றிய கேள்விகளையும் எழுப்புகிறது. இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம், அமைச்சகம், கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (CERT-IN) மற்றும் இந்தியாவில் மில்லியன் கணக்கான பயனர்கள் சமீபத்தில் இந்த பயன்பாடுகளைப் பற்றி புகார் அளித்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன என்று விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply