தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு… ஆளுநர் ஆர்என் ரவி எடுத்த அதிரடி முடிவு ; அதிர்ச்சியில் அறிவாலயம்!!

Author: Babu Lakshmanan
18 ஏப்ரல் 2024, 5:58 மணி
RN RAvi Stalin - Updatenews360
Quick Share

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் எடுத்த முடிவு திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழகத்தில் ஆளுநர் ஆர்என் ரவிக்கும், திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சர் பதவி விவகாரம் உள்பட திமுகவின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆளுநர் ஆர்என் ரவி முட்டுக்கொட்டை போட்டு வந்தார். உச்சநீதிமன்றத்தின் உதவியை தமிழக அரசு நாடியதன் அடிப்படையில் தீர்வு காணப்பட்டு வருகிறது.

இருப்பினும், திமுக அரசுக்கு எதிரான செயல்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மேலும், அரசு விழாக்களில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை ஆளுநர் தெரிவிப்பதாகவும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இப்படி, திமுகவுக்கும் ஆளுநருக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆளுநர் ஆர்என் ரவி முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார்.

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தமிழகத்திற்கு தனது வாக்குரிமையை ஆளுநர் ரவி மாற்றியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க: நீங்க என்னோட சொத்து.. அண்ணாமலைக்கு உருக்கமாக கடிதம் எழுதிய பிரதமர் மோடி!!!

இது தொடர்பாக ராஜ்பவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை காலை 11.00 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மற்றும் ஆளுநரின் துணைவியார் திருமதி. லட்சுமி ரவி, ஆகியோர் சென்னை, வேளச்சேரி சாலையில் உள்ள அட்வண்ட் கிறிஸ்துவ நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை பதிவு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு தமிழகத்தின் ஆளுநராக இருந்தவர்கள், தங்களின் வாக்குகளை அவர்களின் சொந்த மாநிலத்திலேயே சென்று பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில், பீகாரைச் சேர்ந்த ஆளுநர் ஆர்என் ரவி, வாக்குரிமையை தமிழகத்தில் மாற்றியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 212

    0

    1