புதுச்சேரியில் 24 மணி நேரமும் கொரோனா பரிசோதனை: கொரோனா மறுவாழ்வு ஆணையர் தகவல்

12 September 2020, 5:58 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள கோவிட் மருத்துவமனையில் வரும்16ம் தேதி முதல் 24 மணி நேரமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என கொரோனா மறுவாழ்வு ஆணையர் அன்பரசு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கொரோனா மறுவாழ்வு ஆணையர் அன்பரசு, புதுச்சேரியில் கடந்த வாரம் நோய் தொற்று எண்ணிக்கையும் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது என்றும் மேலும் புதுச்சேரியில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும் வகையில், கிராம புறங்களில் உள்ள 15 துணை ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நகர்புறங்களில் உள்ள 6 துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும்,

மேலும் புதுச்சேரி முழுவதும் 20 நடமாடும் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு என்று தெரிவித்த ஆணையர், தேசிய அளவில் எடுக்கப்படும் பரிசோதனையை விட புதுச்சேரியில் 20 மடங்கு அதிகமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், வரும் செப்டம்பர் 16ம் தேதி முதல் அரசு கோவிட் மருத்துவமனையில் 24 மணி நேர கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மக்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்ட ஆணையர்,

மருத்தகங்களில் காய்ச்சலுக்கு மருத்து வாங்குபவர்களின் விவரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என மருந்தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரியில் மட்டும் 672 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கையும், வெண்டிலேட்டர் வசதியுடன் 92 படுக்கையும் நோயாளிகளுக்கு சிகிச்சை இருப்பதாகவும் ஆணையர் அன்பரசு தெரிவித்துள்ளார். இதனிடையை பேசிய மாவட்ட ஆட்சியர் அருண், புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11பகுதிகளை வரும் செப்டம்பர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Views: - 6

0

0