அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு… SDPI, புதிய தமிழகம் கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு நிறைவு

Author: Babu Lakshmanan
20 March 2024, 12:02 pm
Quick Share

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை அதிமுக நிறைவு செய்தது.

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியை இறுதி செய்து, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியையும் பங்கீடு செய்து முடித்து விட்டது. பாஜக ஒருபுறம் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், புதிய தமிழகம், எஸ்டிபிஐ, புதிய பாரதம் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறது. தேமுதிக கூட்டணிக்கு வருமா..? வராதா..? என்ற சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, முதற்கட்டமாக அதிமுகவின் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார். தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கும், தென்காசி தொகுதி புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கீடு செய்து, ஒப்பந்தத்தில் கையெழுத்தானது.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணியை நம்பி அதிமுக கிடையாது என்று கூறினார். மேலும், அதிமுக கூட்டணியில் தேமுதிக 5 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும், ஆனால், இன்னும் தொகுதிகள் இறுதி செய்யவில்லை என்றும் கூறினார்.

Views: - 72

0

0