வேலூரில் மீண்டும் அதே கதிர்…. அதே ACS.. அப்படி ஒரு சிரிப்பு சிரித்த துரைமுருகன்…!

Author: Babu Lakshmanan
12 March 2024, 9:15 pm
Quick Share

இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு தமிழகத்தில் ஒரு தொகுதிக்கு தனியாக தேர்தல் நடந்தது என்றால் அது வேலூர் தொகுதி தான். அப்போதைய வேட்பாளர்களில் திமுகவில் இருந்து அமைச்சர் துரைமுருகனின் மகனும், அதிமுகவில் இருந்து AC சண்முகமும் போட்டியிட்டு, 8,141 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் திமுகவின் கதிர் ஆனந்த வெற்றி பெற்றார்.

இப்படியான நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஒரே மாதத்தில் நடக்க உள்ள நிலையில், மீண்டும், திமுகவில் இருந்து கதிர் ஆனந்த் மற்றும் பாஜகவில் இருந்து ஏசி சண்முகம் போட்டியிட உள்ளனர் என்ற தகவல் கசிந்து வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், வேட்பாளர் விருப்ப மனுவை திமுக தலைமையிடம் கொடுத்து ஆசி வாங்கி உள்ளார் கதிர் ஆனந்த்.எஇதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னெவென்றால், மற்ற வேட்பாளர் நேர்காணலில் மற்றவர்கள் சீட்டில் அமர்ந்து இருக்கும் பட்சத்தில், இவர் மட்டும் முதல்வர் ஸ்டாலின், டிஆர் பாலு, துரைமுருகன் முன் நின்றபடி வேட்பாளர் பரிசீலனையை அணுகினார்.

தூத்துக்குடியில் போட்டியிட ஒரே ஒரு மனு மட்டும் தான் கொடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல, வேலூரில் இருந்து 2 விருப்ப மனுக்கள் வந்துள்ளதாம். ஒன்னு கதிர் அனந்த், மற்றொருவர் திமுக அவைத்தலைவரும், முன்னாள் எம்பியாக இருந்த மொஹம்மத் சாஹு என்பவர் மனு கொடுத்து இருக்கார்களாம்.

“அதுவும் முதல்வரை பார்க்க வேண்டும் என்பதற்காக தான் வேட்பாளர் நேர்காணலுக்கு வந்து இருந்தேன். மற்றபடி போட்டியிடும் எண்ணமில்லை,” என்றும் அங்கேயே எல்லோர் முன்னும் சொல்லி இருக்கிறாராம்.

இதெல்லாம் தாண்டி, வாங்க முதல் வெற்றி வேட்பாளர்னு அமைச்சர் துரைமுருகன் முன்னே அங்கே கூடி இருந்தவர்கள் குறிப்பிட்டு, வேலூர் வேலை எல்லாம் எப்படி போகுது… பரவாயில்லையா.. வேலூரில் பாஜக ரொம்ப டஃப் கொடுப்பாங்க.. எப்படியும் வெற்றி பெறனும் புரிதா…? என முதல்வர் சொல்லி அனுப்பினாராம் கதிரிடம்…

அதே வேளையில், ஏசி சண்முகமும் சென்ற முறை தான் கோட்டை விட்டுவிட்டோம். இந்த முறை விடவே கூடாது என ஆங்காங்கே மெடிக்கல் கேம்ப் நடத்தி வருகிறார். அதேபோல, கதிர் ஆனந்தும் தன்னுடைய 5 வருடம் எம்பி காலகட்டத்தில், சத்துவாச்சாரி சுரங்க பாதை கொண்டு வந்தது முதல் கேவி குப்பம் என்ற பகுதியில் நிறுவி உள்ள டோல் கேட்டை செயல்பாட்டுக்கு வர விடாமல் தடுத்தது வரை லிஸ்ட் போட்டு சொல்லி மக்களிடம் தான் செய்த சாதனைகளை எடுத்து சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

அதாவது, இன்னும் பாஜக தரப்பில் கூட்டணிகள் முடிவாகாத நிலையில், வேட்பாளர் பட்டியல் கூட வெளிவராத நிலையில், எப்படியும் வேலூரில் வெற்றி பெற்றிட வேண்டும் என்பதில் மும்முரமாக களத்தில் இறங்கி உள்ளதாம் திமுக.

Views: - 259

0

0