தமிழ்ச்சங்கம் சார்பில் 24 மணிநேரம் தொடர் திருக்குறள் சொற்பொழிவு

20 July 2021, 5:56 pm
Quick Share

புதுச்சேரி: மத்திய அரசு திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி புதுச்சேரி தமிழ்ச்சங்கம் சார்பில் 24 மணிநேரம் தொடர் திருக்குறள் சொற்பொழிவு நிகழ்ச்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொண்டு திருக்குறள் வாசித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரி புதுச்சேரி தமிழ்ச்சங்கம் சார்பில் 24 மணி நேரம் திருக்குறள் குறித்தான தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது . நிகழ்ச்சியில் புதுச்சேரி தமிழ் சங்க தலைவர் முனைவர் முத்து முன்னிலையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் கலந்துகொண்டு திருக்குறள் தொடர் சொற்பொழிவை தொடங்கி வைத்தார். இன்று காலை 08.30 மணிக்கு தொடங்கி நாளை காலை 08.30 மணிவரை தொடர்ந்து திருக்குறள் குறித்தான தொடர் சொற்பொழிவு நடத்தி திருக்குறளை தேசிய நூலக மாநில அரசும் மத்திய அரசும் அறிவிக்க வேண்டும் என்றும் அதற்காக இந்த நிகழ்வு நடத்தப்படுகின்றது என்று தமிழ்ச்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் சொற்பொழிவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையும், பேச்சாளர்கள், கவிஞர்கள் என அனைவரும் பங்கேற்ற வேண்டும் என்றும் தமிழ்ச்சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Views: - 249

0

0