கூடலூர் பகுதியில் சூறாவளி காற்றுக்கு 24 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்… மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தகவல்…

10 August 2020, 2:31 pm
Quick Share

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு பாதிப்படைந்த பகுதிகள் போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு குறிப்பாக மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் 160 பேர் கொண்ட குழுவால் இப்பணிகள் நிறைவடைந்து உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு பாதிப்படைந்த பகுதிகள் போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு குறிப்பாக மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் 160 பேர் கொண்ட குழுவால் இப்பணிகள் நிறைவடைந்து உள்ளதாகவும், மாவட்டத்தில் பல பகுதிகளில் சூறை காற்று வீசியதால் சேதமடைந்த குடியிருப்புகளும் விரைந்து சீரமைக்கப்படும் என கூறினார்.

மேலும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20 முகாம்களில் சுமார் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தற்போதுவரை தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மழை நிலவரம் நீடிக்கும் வரை அவர்கள் அங்கேயே தங்க வைக்கப்படுவர் எனவும் கூறிய ஆட்சியர், கூடலூர் பகுதியில் சூறாவளி காற்றுக்கு 24 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதாகவும், மாவட்டத்தில் பல பகுதிகளில் சாலைகளில் விழுந்த மரங்கள் 90% அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Views: - 8

0

0