ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் அடுத்தடுத்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு: 6 பேர் படுகாயம்

2 November 2020, 7:49 pm
Quick Share

திருப்பத்தூர்: ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் கரும்பூர் சார்ந்த விமல் – நர்மதா தம்பதியினர் அவர்களது 2 குழந்தைகள் மற்றும் அவரது உறவினர் குழந்தையை அழைத்துக்கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த போது வந்த தியேட்டர் நேருக்கு நேர் மோதியதில் டிராக்டரில் சிக்கி நர்மதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விமல் மற்றும் 3 குழந்தைகள் பலத்த காயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் வாணியம்பாடி அருகே நெக்குந்தி சுங்க சாவடியில் காவல்துறையினர் மற்றும் மருத்துவதுறை சார்பில் கொரோனா வைரஸ் நோய்தொற்று பரிசோதனை நடைபெற்றிருந்த நிலையில், அவர்கள் காவல்துறையினர் வாகனத்தை பிடிப்பவர்கள் என பயந்து மாற்றுப்பாதையில் சென்றதால் லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த மதீன் உயிரிழந்தார்.

அவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற சுகேல் என்பவர் படுகாயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 13

0

0