ஈரோட்டில் பாஜகவில் இணைந்த 70 வயது முதியவர்

20 January 2021, 7:34 pm
Quick Share

ஈரோடு: ஈரோடு மாவட்டம் ஆவுடையார்பாறை கிராமத்தில் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் தனக்கு பா.ஜ.க கட்சி, சின்னம்,பெயர் தெரியாது என மாநில விவசாய அணி தலைவரிடம் வெகுளியாக தெரிவித்தார் .

ஈரோடு மாவட்டம் ஆவுடையார் பாறை கிராமத்தில் காலிங்கராயன் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் விவசாய அணித்தலைவர் ஜி.கே. நாகராஜ் தலைமை தாங்கினார் பின்னர் மாற்றுகட்சியினர் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் படம் போட்ட பனியன் அணிந்து வந்த 70 வயது முதியவரை அழைத்து தங்கள் கட்சியின் அருமை பெருமைகளை ஜி.கே. நாகராஜ் எடுத்துக்கூறினார் .

பின்னர் பாரதீய ஜனதா கட்சி தெரியுமா எனக்கேட்டார், அதற்கு அந்த பெரியவர் தனக்கு தெரியாது என்றார், பா.ஜ.க தலைவர் யார் தெரியுமா ? பா.ஜ.க சின்னம் தெரியுமா ?என கேட்க அவர் வெள்ளந்தியாக தெரியாது என்றார்.அடுத்து அந்த முதியவரிடம் வேறு கட்சிக்கு செல்ல மாட்டீர்கள் அல்லவா, என உறுதிப்பெற்றுக் கொண்டு அவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் சின்னம் மற்றும் தலைவர்களின் பெயர்களை கூறினார்.இதனைதொடர்ந்து 70 வயது முதியவருக்கு காவித்துண்டு மற்றும் சால்வை அணிவித்தார்.

Views: - 0

0

0